உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க நமக்குக் கட்டாயம் தேவை – பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் மற்றும் எல் நினோ காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின், இலங்கை தனது உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மட்டுமே ஒரே தீர்வாகும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வாகன இறக்குமதி வரிகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழல் உலகச் சந்தையில் ஒரு பெரும் நிச்சமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் இலங்கை போன்ற நாடுகளின் எரிபொருள் விலையையும், பணவீக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

இந்த உலகளாவிய அதிர்ச்சிகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், காணிப் பயன்பாடு, மனித வளம் மற்றும் தொழில்துறைகளில் உள்ள தடைகளை நீக்கி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதற்கான ஒரே வழியாகும்.

அதேபோல, வரவிருக்கும் எல் நினோ காலநிலையால் வறட்சி ஏற்பட்டால், நீர்மின் உற்பத்தி குறைந்து டீசல் மற்றும் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியைச் சார்ந்திருக்க வேண்டியேற்படும். இது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தரக்கூடும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துதல் குறித்துப் பார்க்கையில், நாம் எமது கையிருப்புச் சேமிப்பில் இருந்து கடனைச் செலுத்தக் கூடாது; அவ்வாறு செய்தால் சர்வதேச கடன் தரப்படுத்தலில் எமது நாட்டின் நிலை மேலும் வீழ்ச்சியடையும்.

எனவே, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் வரும் டொலர்களைக் கொண்டே நாம் கடனைச் செலுத்த வேண்டும் அல்லது பழைய கடன்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்சமயம் எமது கடன் தரப்படுத்தல் ஊ1010 மட்டத்தில்தான் உள்ளது, இதனை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காகவாவது குறைந்தபட்சம் டீ மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலமாகச் சந்தைக்குச் சாதகமான சமிக்ஞைகளை வழங்க வேண்டும்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை கூடும் போது உள்நாட்டிலும் விலையை மாற்றுவதே பொருத்தமானது. இலங்கையில் 70 சதவீதத்க்கும் அதிகமான எரிபொருளை வசதி படைத்தவர்களே பயன்படுத்துவதால், மானியங்கள் வழங்குவது அவர்களுக்குத்தான் சாதகமாக அமைகிறது. மேலும், தொடர்ந்து மானியங்களை வழங்க அரசிடம் போதிய நிதி இல்லை.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் வரிகள் குறித்துப் பேசுகையில், தற்சமயம் வாகனங்களுக்கு 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி இவ்வாறான கூடுதல் வரிகளை நீடிக்க முடியாது.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் இந்த கூடுதல் வரிவிதிப்பை நீடிப்பது பொருத்தமற்றது. எனினும், அதனை ஒரேயடியாக நீக்கும் போது, மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் கடிதங்களை திறக்கச் செய்யத் தொடங்குவார்கள்.

இது சந்தையில் மீண்டும் ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்பதால், அரசு வருமானத்தை ஈட்டுவதைப் போலவே தனது செலவுகளையும் முறையாக முகாமைத்துவம் செய்ய பழக வேண்டும் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்