செம்மணி அறிக்கை!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் மேலும், “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, அந்தத் தரப்பினர் அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தமது கருத்துக்களையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைப்பார்கள்.

இதற்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மாதிரிகளின் பழமையைக் கண்டறியும் கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பான தனது தீர்மானத்தையும் உத்தரவையும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.” என்றார்.

867793981_1826855906111595_6657237902329207622_n

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

October 28, 2026

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி மீனவர்களை தேடிச் செல்லவுள்ள அணியினருக்கான பாதுகாப்பு சட்டைகளை (safety jacket)

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு

October 28, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குற்றப்புலனாய்வு

namal 22222222222

பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் – நீதிமன்றத்தில் அலி சப்ரி

October 28, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர். அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை

gajendran

நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன்

October 28, 2026

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ள கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடு;ம்பத்தினருடன் இணைக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற

rajeevkanth

இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!–ரஜீவ்காந்

October 28, 2026

இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிருஸ்ணகுமாருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

batti land

மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்

October 28, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் மீதான துப்பாக்கிச் சூடுகள், அச்சுறுத்தல்கள் மற்றும்

image_7bb7d5bb0c

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது!

October 28, 2026

இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி

arr

மானிப்பாயில் போதைக் குளிசைகளுடன் இருவர் கைது

October 28, 2026

யாழ்ப்பாணம், மானிப்பாய் சென். பீட்டர்ஸ் வீதிக்கு அருகிலுள்ள பகுதியில், 500 போதை குளிசைகளுடன் 24 மற்றும் 26 வயதுடைய இருவர்

lal

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது !

October 28, 2026

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தாம்

2

இலங்கையின் ​சமூக ஊடகங்களில் குழந்தைகள் சுரண்டப்படுவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்!

October 28, 2026

​சமூக ஊடகங்கள் மூலம் வணிக ரீதியான லாபம் மற்றும் இணையப் பிரபலத்தைப் பெறுவதற்காகக் குழந்தைகள் பயன்படுத்தப்படும் Kid fluencing என்ற

ls

லண்டன் புறப்பட்ட விமானத்தை தடுத்த பறவை

October 28, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, புதன்கிழமை(28) ஆம் திகதி நண்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் லண்டன் நகரம் நோக்கிப் புறப்பட்ட,

M-K-Stalin

“SIR-ஐ ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்!

October 28, 2026

சென்னை: நாடு முழுவதும் எஸ்ஐஆர் (SIR – Special Intensive Revision) நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மீண்டும் பழைய