உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய, இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறித்த மனுவை இன்று மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கமை இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளது.