சென்னை
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக, தவெக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்! இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜோ அருண் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராகப் பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இவரைத் தமிழ்நாடு ஆளுநர் முறைப்படி நியமித்துள்ளார். இதன்படி, பெலிக்ஸ் ஜெரால்டு ஆகஸ்ட் 05, 2026 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகிப்பார் எனத் தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசுச் செயலாளர் வி. தட்சிணாமூர்த்தி அரசாணையாக வெளியிட்டுள்ளார். தலைவருக்கான நியமன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான ஆணைகள் விரைவில் தனியாக வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது!
#FelixGerald #MinoritiesCommissionTN #TVKGovernment #ThalapathyVijay #ThameemAnsari #TamilNaduNews #TNPolitics #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #TamilNaduGovernment