சிறப்பு விசாரணையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு அறிவிப்பு இன்னமும் வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை மேற்கொள்ளவதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும் என்பதுடன் சட்டத்தை மீறும் செயலாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில் எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் மிகவும் முக்கியமான வழக்குகளை அதன் முக்கியத்துவம் கருதி அந்த வழக்கு விசாரணையை விசேட சிறப்பு விசாரணையாக ரயல் அட்பார் முறையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மாத்திரமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை 3ஆவது தரப்பு கையில் எடுப்பதற்கு முயற்சிக்குமானால் அது முற்றாக சட்டத்தை மீறும் செயலாகும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை இவ்வாறு சிறப்பு விசாரணையாக மேற்கொள்ளப்போவதாக ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு சிறப்பு விசாரணைமேற்கொள்வதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும். அது பிரதம நீதியருக்கு செய்யும் அகெளரவமாகும்.

அத்துடன் வழக்கு விசாரணைகளின்போது ஒருவருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமே இருக்கிறது. சட்டமா அதிபர் அதனை தீவிரமாக ஆராய்ந்து, சுயாதீனமாக பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எந்த அழுத்தங்களும் அவருக்கு இருக்கக்கூடாது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலையில் இருக்கும்போது சுகயீனமுற்ற நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு எமது நாட்டில் இருக்கும் உயர் பதவிகளில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் 7பேர் சிகிச்சை வழங்கி, அவரின் சுகாதார நிலைமை தொடர்பில் அறிக்கை வழங்கி இருந்தனர்.

ஆனால் அறிக்கை வழங்கிய இந்த விசேட வைத்திய நிபுணர்கள் 7 பேரும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். தொழில் ரீதியாக அவர்கள் தங்களது கடமையை செய்ததனால், இறுதியில் அவர்கள் பாரிய குற்றம்

செய்தவர்கள்போல் குற்றப்புலனாய்வுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இதனால் அந்த வைத்தியர்கள் பெரும் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

நாட்டில் இருக்கும் சிறந்த வைத்திய நிபுணர்கள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பாத ரணில் விக்ரமசிங்க, சுயமாக தீர்மானித்து, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாற நிலை தொடருமானால்

நாட்டில் இருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்வரமாட்டார்கள். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

அதனால் நாட்டில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் எந்த அழுத்தங்களுக்கும் உட்படாமல் தங்களின் கடமையை செய்யக்கூடிய நிலைமை இருக்க வேண்டும்.

நாட்டில் சிறந்த வைத்தியர்கள் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க ஏன் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என நாட்டுக்குள் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருவதால், நாட்டு மக்கள் இதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கே இந்த விடயங்களை தெரிவிக்க தீர்மானித்தோம் என்றார்.

Puttne

உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் நெதன்யாகு – புடின் – ட்ரம்ப் முக்கியபங்கு! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

April 22, 2026

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான

selva

எதிர்வரும் 26ம் திகதி: தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்த விருது விழா

April 22, 2026

தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்திர ‘தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பரிசில்கள்’ வழங்கும் விழா, எதிர்வரும் 26.04.2026 அன்று

fire

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

April 22, 2026

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர

hormuz60

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

April 22, 2026

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

port cont

கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

April 22, 2026

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய

namal

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

April 22, 2026

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல,

dea

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

April 22, 2026

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட

Dead

கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

April 22, 2026

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப்

sel

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

April 22, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற

photo-collage.png (16)

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

April 22, 2026

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச

sur

இலங்கையில் நடிகர் சூர்யா

April 22, 2026

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார்.

theepachelvann

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு சோசலிச மக்கள் மன்றம் கண்டனம்

April 22, 2026

தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் பல இலக்கியப் படைப்புகள் வாரக்கணக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சோசலிச