விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவு கேட்டு வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சத்தியத்தை வெற்றிபெறச்செய்வோம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை (14) கண்டியில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
அந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது யாருக்கும் தெரியாது.சுங்க சட்டத்தை மீறியே இவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள் இந்த கொள்கலன் விடுவிப்புக்காக ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
பௌத்த பிக்குகள் ஒருசிலரின் முறையற்ற செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த புத்த சாசனத்தையும் மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் காலை முதல் இரவுவரை போலியான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
புத்தசாசனத்தை இல்லாதொழித்து இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வரலாறுடன் தொடர்புடைய விடயங்கள் பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.இது முற்றிலும் தவறானது.இலங்கை செய்திகள்
இந்தியாவுடன் அரசாங்கம் செய்துக் கொண்ட பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரையில் பாராளுமன்றத்துக்கு கூட வெளிப்படுத்தப்படவில்லை. வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்துக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சுரேஷ் சலே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதை போன்று குற்றப்புலனாய்வு பிரிவு அவரை நடத்துகிறது. தற்போது அவரது மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் அவரை கேட்டு வருகின்றனர்.Geographic Reference
விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே தற்போது அவரது மடிக்கணனியின் ரகசிய இலக்கை இவர்கள் கேட்டு வருகின்றனர்.
அதேநேரம் மத்திய கிழக்கு யுத்தத்தை காரணம் காட்டி எரிபொருட்களின் விலையை பாரியளவில் அதிகரித்திருக்கிறது. அதிக விலைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்துவிட்டு அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளார்கள். அதனால்தான் எரிபொருட்களின் விலை இந்தளவு அதிகரிக்க காரணமாகும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடையகிறது. இந்த ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் மின்கட்டணம், எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
மேலும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை 56 நாட்களில் மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். ஆனால் தித்வா அனர்த்தம் ஏற்பட்டு 7 மாதங்களாகியும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வாடகை வீடுகளில் வாழ்த்து வருகிறார்கள்.
அதனால் இந்த அரசாங்கம் தெரிவித்த எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கிறது. எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவிசாவலையில் ஆம்பிக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு கூட்டம் இன்று கண்டியில் இடம்பெறும் நிலையில் அடுத்த கூட்டம் குருணாகலையில் நடத்த இருக்கிறோம். இவ்வாறு நாடு பூராகவும் அரசாங்க்துக்கு எதிரான கூட்டங்களை நடத்தி மக்களை அணிதிரட்டிக்கொண்டு அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.