ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார். இது தவிர முதற்தரப் போட்டிகள், ஏ போட்டிகளிலிருந்தும் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் 2027-28 பருவகாலம் வரையில் தனது ஒப்பந்தத்தை நீடித்த நிலையில் மெல்பேண் ஸ்டார்ஸுக்காக பிக் பாஷ் லீக்கில் விளையாடவுள்ளார்.
ஏற்கெனவே கடந்தாண்டு ஜூனில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து மக்ஸ்வெல் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு தடவைகள் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மக்ஸ்வெல், ஒரு தடவை இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தையும் வென்றிருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்காக 130 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய மக்ஸ்வெல் 100 பந்துகளுக்கு 154.42 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 2,897 ஓட்டங்களைப் பெற்றதுடன், 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 7 டெஸ்ட்களில் விளையாடிய மக்ஸ்வெல், இறுதியாக டெஸ்டொன்றில் 2017ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.