சமூக நீரியல்துறை பேராசிரியர், வஸ்பர் குழுவுடன் இணைந்த நயினாதீவு நீர்வள ஆய்வுப் பயணம் – உரையாடலில் ஆதக்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் ..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் WASPAR ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது.
பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் வஸ்பர் குழுவைச் சேர்ந்த ஆறு ஆய்வு மாணவர்களோடு மேற்படி பயணத்தில் மக்களுக்கும் நீருக்கும் இடையிலான ஊடாட்டத்தை பரந்த பார்வையில் பார்க்கின்ற சமூக நீரியல் என்கிற அறிவியல் கோட்பாட்டின் மூலகர்த்தாவான பேராசிரியர் முருகேசு சிவபாலன் அவர்களுடன் சென்று நயினாதீவின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடலில் ஈடுபட்டனர்.
காலையில் நயினாதீவு மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தோடும், மதியம் தென்பகுதி மலையடி மீனவர் சங்கத்தினருடனான உரையாடலோடும், மாலை முதலாம் வட்டார வல்லிக்காடு மீனவர் சமூகத்தினருடன் மக்களை ஈடுபடுத்திய உரையாடலோடும் பல்வேறு நீர்சார்ந்த அனுபவ பகிர்வுகளை பெற்றுக் கொண்டனர்.
வல்லிக்காடு, காளி கோவிலடி, காட்டுக் கந்தசாமி கோவிலடி, தீர்த்தக்கரை பக்கமுள்ள பெருங்கிணறுகளின் நீரின் உவர்தன்மை, நீரின் இயல்பு குறித்த தரங்களையும் ஆய்வு செய்ததோடு, அங்குள்ள மக்களோடும் கலந்துரையாடினர்.
கடல் நீர் நன்னீராக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நீரின் தொடர்ச்சியான வழங்கலில் ஏற்பட்டுள்ள தடையினால் ஏமாற்றமடைந்திருந்த மக்கள், பழுதடைந்திருந்த இயந்திரத்தின் திருத்தத்தின் பின்னர் நீர் வரத் தொடங்கியிருந்தாலும் போதிய அளவு நீர் வரவில்லை என்கிற ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்திருந்தனர்.
சில பகுதிகளில் நெடுங்காலமாக நன்னீர் பெற்று வந்த கிணறுகள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம், உவர்நீராகும் ஆபத்து போன்ற நம்பிக்கையீனங்களை மக்கள் வெளியிட்டிருந்தார்கள்.
நீரின் நெருக்கடியை புரிந்தவர்களாக குழாயில் நீர் வருவதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டு இருக்கின்ற நீர் வளங்களை கைவிடுகின்ற நிலைக்கு ஒரு நாளும் போகமுடியாது என்கின்ற பாரம்பரியமாக தொடர்ந்து வருகின்ற உண்மையை அவர்களுக்கு மீள வலியுறுத்தி, அதற்கு உகந்தவகையில் பழைய நீர்மூலங்களை அதே நிலையில் பேணுவதற்கான அவர்களுடைய பொறுப்பையும் ஈடுபாட்டையும் வலுவாக தொடர்வதற்கு துணை நிற்போம் என்பதையும் குழுவினர் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
அதனை விட குளங்களின் தூர்வாரலுக்காக அரசு ஒதுக்கியிருக்கின்ற புதிய நிதியின் வருகையின் போது பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான குளத்தை ஆழப்படுத்துகின்ற செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் என்பதையும், களிமண்ணை அடித்தளமாக கொண்ட சிறிய குளங்கள் ஒரு போதும் இயந்திரங்களை இறக்கி செயற்படக் கூடாது. அவ்வாறு இழந்த குளங்களின் கதைகள் எம்மிடையே இருக்கின்றன என்பதனையும் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், கமக்காரர் அமைப்புகள் கூட்டாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கியிருந்தனர்.
மக்களிடமிருந்து உரையாடல்களின் போது பெற்றுக் கொண்டுள்ள தகவல்களையும் தொகுத்து ஆய்வு செய்து நயினாதீவின் நீர்வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை தொடர்வதிலும் வஸ்பர் குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்