சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (13) திருகோணமலை, மூதூர் – மஹாவலி கங்கையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ச*டலமாக மீட்கப்பட்டவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க வயது (39) என தெரியவருகிறது.
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சார்ஜன்ட் உயிரிழந்த நிலையில் ச*டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன