Salsa on St. Clair’ துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிச் சத்தத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த பெருங்குழப்பத்தை விவரிக்கும் நேரில் பார்த்த சாட்சிகள்!

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு இசை, நடனம் மற்றும் லத்தீன் கலாச்சாரக் கொண்டாட்டங்களுடன் களைகட்டியிருந்த ஒரு பரபரப்பான வீதி, துப்பாக்கிச் சத்தம் முழங்கியதைத் தொடர்ந்து திடீரென பெரும் குழப்பமும் பதற்றமும் நிறைந்த போர்க்களமாக மாறியது. இதனால் சிறு குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ‘Salsa on St. Clair’ திருவிழாவின் நடுவே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டபோது […]
இரண்டு கட்டிடங்கள் தீக்கிரை: கென்ட்வில் மனிதன் மீது தீவைப்பு குற்றச்சாட்டு

கடந்த வாரம் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) கென்ட்வில் பகுதியில் இரண்டு கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்த தீ விபத்து தொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் மீது தீவைப்பு (Arson) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் ‘வெப்ஸ்டர் கோர்ட்’ (Webster Court) பகுதியில் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இரு கட்டிடங்களுக்கும் இடைப்பட்ட சந்துப் பகுதியில் (Alley) ஆரம்பமான […]
வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் புதிய வீட்டுத்திட்ட மக்கள், தமது கிராமத்துக்கான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தளவாய் புதிய வீட்டுத்திட்ட கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படும் இவ்வீதியால் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர். ஆர்ப்பாட்டம் […]
நாட்டில் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவது குறித்து அவதானம்

ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்து வருவதாகவும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (12) இடம்பெற்ற மீரிகம வைத்தியசாலையின் சிறுநீரகக் கற்களை அகற்றும் புதிய சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பல்வேறு தொழில் வல்லுநர்களால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை […]
இலங்கையின் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச கவனம்!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Palexpo வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற “WSIS Forum 2026” மாநாட்டில் இலங்கையின் டிஜிட்டல் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் இந்த மாநாட்டில் பங்கேற்றார். டிஜிட்டல் சந்தைக்கான நிர்வாகத் தேவைகளை நடைமுறையில் செயல்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அமர்வில் உரையாற்றிய பணிப்பாளர் நாயகம், இலங்கையின் தேசிய டிஜிட்டல் […]
தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவத்தை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு சட்டத் திருத்தங்கள் அவசியம்!

பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவில் வலியுறுத்தப்பட்டது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பாகவும், […]
முதியவர் ஒருவரிடம் $33,000 மோசடி: ஒன்ராறியோவைச் சேர்ந்த நபரைத் தேடும் காவல்துறை!

முதியவர் ஒருவரிடம் பல்லாயிரக்கணக்கான டாலர்களை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை டர்ஹாம் பிராந்திய (Durham Region) காவல்துறை தேடி வருகிறது. அத்துடன், இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல நபர்கள் இருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். கடந்த மே மாதம், 78 வயதான முதியவர் ஒருவர், தனது வீட்டுத் தோட்டம் மற்றும் பழுதுபார்ப்பு வேலைகளுக்காக (Landscaping and repair work) சந்தேக நபரிடம் 33,000 டாலர்களை வழங்கியதாகவும், ஆனால் அந்த வேலைகள் எவையும் செய்து […]
எமது காணிகள் கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் ஒயாது..! ‘ பலாலி- மயிலிட்டி மக்கள் உறுதி

யாழ். வலி, வடக்கு மக்களின் காணிகளை தேசிய பாதுகாப்பின் பெயரால் அபகரித்துள்ள அரசாங்கம் மற் றும் இராணுவம், மக்களின் காணிகளில் விவசாயம் செய்து, உற்பத்திப் பொருட் களை செய்து, சுற்றுலா விடுதிகளை நடாத்தி வருமானம் ஈட் டிவரும் நிலை யில், சுயதேவைக்காக மட்டுமே விவசாயம் செய்வதாக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறுவது வேடிக்கை என மக்கள் கூறியுள்ளனர். வலி, வடக்கு காணிகள் விடுவிக்கப்படாது என அண்மையில் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடா ளுமன்றில் தெரிவித்திருந்த […]
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கச் சென்ற STF வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (13) திருகோணமலை, மூதூர் – மஹாவலி கங்கையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ச*டலமாக மீட்கப்பட்டவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க வயது (39) என தெரியவருகிறது. மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது, நீரில் அடித்துச் […]
விஜய் இதை செய்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்-ஆர்.பி.உதயகுமார்

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கி அவருக்குப் பகிரங்கமான சவால் விடுத்துள்ளார். த.வெ.க.-வின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை முதலமைச்சர் விஜய் சரியாகச் சொல்லிவிட்டால், தான் அரசியலில் இருந்தே விலகி விடுவதாக அவர் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் இளைய தலைமுறையைத் தவறாக வழிநடத்தி விஜய் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டிய அவர், கொள்கையற்ற அரசியல் தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாழாக்கும் என்றார். மக்கள் பணத்தைக் கொண்டு த.வெ.க. கட்சியை […]