வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் புதிய வீட்டுத்திட்ட மக்கள், தமது கிராமத்துக்கான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தளவாய் புதிய வீட்டுத்திட்ட கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படும் இவ்வீதியால் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் சு.ரகுவரன் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் க.நாகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

இதன்போது வீதிப் புனரமைப்பை விரைவுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்களினால் பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இது குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று

wea

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

July 26, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால்

vehicle

1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்

July 26, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்