தவெகவில் இணைய என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அ.தி.மு.க.-விலிருந்து விலகித் த.வெ.க.-வில் இணைந்தது குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அ.தி.மு.க. தலைமை மீது தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இருந்த தொடர் அதிருப்தியே தனது விலகலுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். த.வெ.க.-வில் இணைந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், இது பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் எடுக்கப்பட்ட தனது சுய விருப்பமான முடிவு என்றார். […]
டொராண்டோவின் ‘சalsa on St. Clair’ விழாவில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு: அச்சம், துக்கம் மற்றும் பலத்த பாதுகாப்புக்கான கோரிக்கைகள்

கடந்த சனிக்கிழமை இரவு நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்து, நால்வர் படுகாயமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ‘Salsa on St. Clair’ கலை விழா ரத்து செய்யப்பட்டது. லத்தீன் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு பெருவிழாவாக அமைந்திருக்க வேண்டிய இந்த நிகழ்வு, துரதிர்ஷ்டவசமாக ஒரு குற்றக்களமாக மாறியுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு, ‘St. Clair Avenue West’ மற்றும் ‘Arlington Avenue’ சந்திப்புக்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, சுமார் 13,000 […]
டொராண்டோ துப்பாக்கிச் சூடு: பிராம்ப்டனைச் சேர்ந்த இளைஞர் மீது 10 குற்றச்சாட்டுகள்

டொராண்டோவின் போல்சன் பியர் (Polson Pier) பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, பிராம்ப்டனைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். போல்சன் வீதி (Polson Street) மற்றும் செர்ரி வீதி (Cherry Street) சந்திப்புக்கு அருகில் அதிகாலை 3:30 மணியளவில் இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கியால் சுட்ட பிறகு, பயணிகள் இருந்த ‘ரைட்ஷேர்’ (rideshare) வாகனம் ஒன்றை வழிப்பறி […]
தவெக அரசுக்கு புகழ்பாடும் புலவராக வைகோ மாறிவிட்டார் – கிருஷ்ணசாமி

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, த.வெ.க. அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். த.வெ.க. அரசுக்கு வைகோ புகழ்பாடி வருவதாகக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினார். கேபினட் கூட்டங்களில் உரிய அதிகாரமற்ற நபர்கள் பங்கேற்பது நிர்வாகச் சீர்கேட்டின் அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், குதிரை பேரங்களைத் தடுக்க கட்சித் தாவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். […]
பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

சென்னை: பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதலமைச்சருமான விஜய், இன்று தொகுதி மக்களுக்குத் தனது முதல் வருகையை மேற்கொண்டார். வியாசர்பாடி சர்மா நகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார். தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ‘மக்கள் சேவை தளம்’ என்ற புதிய செல்போன் செயலியையும் அவர் அறிமுகப்படுத்தினார். நியாயவிலைக் கடையில் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கிய அவர், பெரம்பூர் தொகுதியின் […]
பேராசிரியர் ரகுராம் விவகாரம் – நீதிமன்றம் புதிய உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது ஒரு முன்னாள் மாணவி (இரண்டு வருடங்கள் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்) துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு தெரிவித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் டிக்டோக், முகநூல் தளங்களில் பரவின. இதையடுத்து, பேராசிரியர் ரகுராம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு […]
அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்தால் ஜீரோவில் இருந்து மீண்டும் அரசியல் வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சித் தாவல் செய்தவர்கள் மற்றும் த.வெ.க. அரசு குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.-விலிருந்து பிரிந்து த.வெ.க.-விற்குச் சென்றவர்கள் மீண்டும் வந்தால், அவர்களுக்குப் புதிய தொண்டர் அந்தஸ்து மட்டுமே வழங்கப்படும் என்றும், ஜீரோவில் இருந்தே அவர்களின் அரசியல் பயணம் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். த.வெ.க. ஆட்சி தற்காலிகமானது என்று கூறிய அவர், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவு வாபஸ் […]
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இப்போராட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன்போது செயலணியினர் மேலும் கூறுகையில், தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் […]
6 மாதங்களில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் ஆவார்: அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை

வல்லநாடு: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இன்னும் ஆறு மாதங்களுக்குள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அவர் சவால் விடுத்துள்ளார். த.வெ.க. அரசு தி.மு.க.வினரை ஒடுக்குவதாகவும், மிரட்டிப் பதவிகளைப் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர். குறித்துப் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்குத் தகுதியில்லை என்று கூறிய அவர், ஆட்சியைத் […]
வி.சி.க.வை பலவீனப்படுத்த நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்- திருமாவளவன் தாக்கு

தர்மபுரி: வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் வளர்ச்சியை முடக்க நினைப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். வி.சி.க. நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் கட்சியைப் பலவீனப்படுத்தலாம் என்று கருதும் சக்திகள், தனது இயக்கத்தின் உண்மையான வலிமையை அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பனையூர் பாபு போன்றோர் கட்சி விலகல் குறித்து நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர், அரசியல் அறம் தவறாமல் கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு […]