இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிகளவானோர்

இலங்கையில் அறிக்கையிடப்படும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் பரவற்போயியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹேரத், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எச்.ஐ.வி தொற்றாளர்களைக் கண்டறியும் வீதம் […]

மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்திடம் கூட்டாகக் கோரிக்கை

நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை (Provincial Council elections) மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கூட்டாக அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அத்துடன், பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான கூட்டு முயற்சியையும் அவை அறிவித்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA), இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்குக் […]

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இரவு சந்தேகநபர் மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகரகம, புகையிரத வீதிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவராவார். இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு […]

மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தவெக ஆட்சி இருக்காது: ராஜேந்திர பாலாஜி

சிவகாசி: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தில் த.வெ.க. மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துக் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார். த.வெ.க. ஒரு நிலையற்ற கட்சி என்றும், தி.மு.க.-வை வீழ்த்தும் சக்தியாக அ.தி.மு.க. மட்டுமே இருக்கிறது என்றும் அவர் கூறினார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் கண்ணியக் குறைவாகப் பேசுவது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி நீடிக்காது என்று எச்சரித்தார். த.வெ.க.-வின் வெற்றி நிலையற்றது […]

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற கல்முனை பிராந்திய இணையத்தின் ‘அன்பின் அழைப்பு’ ஒன்றுகூடல்

கனடா – கல்முனை பிராந்திய இணையத்தின் ‘அன்பின் அழைப்பு’ நிகழ்வு கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை Toronto – Milliken Park இல் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை விசு கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோடை காலத்தில் கனடாவில் நடைபெறும் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவற்றில் கனடா – கல்முனை பிராந்திய இணையத்தின் ‘அன்பின் அழைப்பு’ முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. ‘ஒன்றுபட்டால் உயர்வு இணைந்தால் இனிமை’ என்ற தொனிப்பொருளில் […]

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத் […]

முன்னாள் அமைச்சர் விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று (13) அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதியான […]

ஒஸ்கார் விருது வென்ற ஜூராசிக் பார்க் – சாம் நெய்ல் காலமானார்

ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான ‘The Piano’ மற்றும் ‘Jurassic Park’ போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்முகத்திறன் கொண்ட நடிகரான சாம் நெய்ல் (Sam Neill) தனது 78 ஆவது வயதில் காலமானார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த நடிகரின் மறைவு அறிவிக்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனினும் 2022 ஆம் ஆண்டில் இரத்தப் புற்றுநோய் வகையான மூன்றாம் கட்ட பாதிப்பை நெய்ல் எதிர்நோக்கியிருந்தார். […]

போதைப்பொருள் ஒழிப்புச் சோதனை; ஒரே நாளில் 640 பேர் கைது!

லிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 30 […]

நீதிமன்ற விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுகிறதா?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார். இதனால் கீழ் […]