காட்டு யானை தாக்தி பெண் ஒருவர் மரணம்

மாத்தளை – லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மேற்படி பெண், தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த அவர், உடனடியாக லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய […]

டெங்கு அபாய வலயங்கள் 175 ஆக உயர்ந்தன!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் இன்று(13.07.2026) முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175 ஆக உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் […]

தந்தை மகனால் படுகொலை; பிறந்த நாளில் சம்பவம்

மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே மகனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் […]

இலங்கையின் சிறைகளில் நெரிசல்; மாற்று வழிகளை ஆராயுமாறு கோரிக்கை

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு சந்தேக நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்ட மா அதிபர் பிரிவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பதே பிரதான காரணமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைப்படுத்தாமல் வெளியில் வைத்து விசாரணை செய்யக்கூடிய வழக்குகளும் இருக்கின்றன. குற்றத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் வெளியில் வைத்திருந்தே அவ்வாறான வழக்குகளை விசாரணை செய்ய முடியும். எனினும், […]

தீவிரமடையும் அமெரிக்க – ஈரான் மோதல்

அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று, ஈரான் வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியது. மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தின் மீது இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் முயன்றதால் இந்த […]

பாடசாலை மாணவர்களுக்கு கை,கால்களை மூடும் ஆடைகள்

ளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் டெங்கு பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ தெரிவித்தார். இது தொடர்பில் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இது […]

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆறு தமிழ் பேசும் கட்சிகளிடையிலான புரிந்துணர்வு இன்றையதினம் கொழும்பு ரேணுகா ஹோட்டலில் பிற்பகல் ஒருமணிக்கு நடைபெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் […]

யாழ். தம்பதி சென்னையில் கைது

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் […]

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டைக் காத்தவர்களை அநுர அரசு பழிவாங்குகிறது – சம்பிக்க ரணவக்க

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த இராணுவ உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். குருநாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று சாடிய அவர், பொருளாதாரச் சுமைகள் அனைத்தும் […]

குடிவரவு மோசடி திட்டத்தில் தொடர்புடைய சாஸ்கடூன் நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

குடிவரவு ஆவணங்களில் தவறான விபரங்களை வழங்குவதற்குத் தூண்டியதாகக் (counselling immigration misrepresentation) குற்றத்தை ஒப்புக்கொண்ட சாஸ்கடூன் (Saskatoon) பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நிபந்தனையுடனான சிறைத்தண்டனையும் (conditional sentence), 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல்வீர் சிங் (Balvir Singh) என்ற இந்த நபருக்கான தண்டனை கடந்த ஜூலை 8 ஆம் திகதி வழங்கப்பட்டது. இத்தண்டனையின் ஒரு பகுதியாக அவர் 40 மணித்தியாலங்கள் சமூக சேவையிலும் (community service) ஈடுபட வேண்டும். சாஸ்கடூன் பகுதியிலுள்ள இலாப […]