இன்று நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் வழக்கு விசாரணை…

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, இன்று (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அங்குள்ள சிறைக்கைதிகள் சிலரை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை […]

வாடகைக்கு குடியிருந்தவர்களின் குளியலறை மற்றும் படுக்கையறைகளில் இரகசிய கமெராக்கள் வைப்பு: கல்கரி வீட்டு உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது!

வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களது வீட்டுப் பகுதிக்குள் இரகசிய கமெராக்கள் (hidden cameras) பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததை அடுத்து, கல்கரி (Calgary) பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் (landlord) ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 7 ஆம் திகதி, வாடகைக்கு குடியிருந்த நபர் ஒருவர் தனது குளியலறையிலிருந்த மின்னழுத்தப் பாதுகாப்பு சாதனத்திலும் (surge protector), படுக்கையறையிலிருந்த புகை எச்சரிக்கை கருவியிலும் (smoke detector) இரகசிய கமெராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியதாக பொலிஸார் […]

வுட்பைன் கடற்கரையில் நடந்த கடுமையான தாக்குதல் சம்பவம்: குயெல்ஃப் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது

வுட்பைன் கடற்கரையில் (Woodbine Beach) ஒருவரைத் தீவிரமாகக் காயப்படுத்திய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, குயெல்ஃப் (Guelph) பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவர் மீது டொராண்டோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு 10:45 மணியளவில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சந்தேக நபர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட நபரை அணுகி, முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் கூர்மையான […]

மிசிசாகா வாகன நிறுத்துமிட வாகனத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்தார்!

மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள குடியிருப்பு வாகன நிறுத்துமிடங்களை (residential parking garages) இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் வாகனத் திருட்டுகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த ஒன்டாரியோ, எரின் (Erin, Ont.) பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் ஹுரோன்டாரியோ வீதி (Hurontario Street) மற்றும் பேர்ன்ஹாம்தோர்ப் வீதி கிழக்கு (Burnhamthorpe Road East) ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள […]

நாட்டில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வீழ்ந்துவிட்டது!

நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விசனம் வெளியிட்டுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயம் நேற்று (12) வெலிக்கடை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் பயணமானது மிகவும் நம்பிக்கைக்குரியதொன்றாகும். சர்வஜன அதிகாரம் எனும் கட்சியினை நாம் ஆரம்பித்ததே ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து, […]

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டவர்களை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று(12) நேரில் சென்று பார்வையிட்டார். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுக்கு அமைய, 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கடந்த 10 ஆம் திகதி வௌியேற்றப்பட்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக பிரதியமைச்சர் நேரில் கேட்டறிந்தார். காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதாக பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் […]

மக்கள் பாவனைக்கு சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்

சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் […]

இன்று கடற் பகுதிகளில் பலத்த காற்று

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இன்று (13) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் […]

தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய […]

நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் தற்போது அதிகளவில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு […]