குடிவரவு மோசடி திட்டத்தில் தொடர்புடைய சாஸ்கடூன் நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

குடிவரவு ஆவணங்களில் தவறான விபரங்களை வழங்குவதற்குத் தூண்டியதாகக் (counselling immigration misrepresentation) குற்றத்தை ஒப்புக்கொண்ட சாஸ்கடூன் (Saskatoon) பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நிபந்தனையுடனான சிறைத்தண்டனையும் (conditional sentence), 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வீர் சிங் (Balvir Singh) என்ற இந்த நபருக்கான தண்டனை கடந்த ஜூலை 8 ஆம் திகதி வழங்கப்பட்டது. இத்தண்டனையின் ஒரு பகுதியாக அவர் 40 மணித்தியாலங்கள் சமூக சேவையிலும் (community service) ஈடுபட வேண்டும்.

சாஸ்கடூன் பகுதியிலுள்ள இலாப நோக்கற்ற நிறுவனம் (non-profit) ஒன்றுடன் தொடர்புடைய குடிவரவு விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் இந்த விசாரணை தொடங்கியதாக கனடா எல்லைச் சேவைகள் முகமையகம் (CBSA) தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாகாண குடிவரவு விண்ணப்பங்களில் போலியான வேலைவாய்ப்பு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வெளிநாட்டுப் பிரஜைகளை சிங் தூண்டியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆவணங்களில் போலியான ஊதிய விபரப் பட்டியல்கள் (fake pay stubs), வேலை வாய்ப்புக் கடிதங்கள் மற்றும் உண்மையில் இல்லாத வேலைகளுக்கான வேலைவாய்ப்புப் பதிவுகள் ஆகியவை அடங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில தனிநபர்கள் பின்னர் தங்களது அனுமதிப் பத்திரங்களின் (permits) கீழ் அங்கீகரிக்கப்படாத விநியோகம் (delivery), கட்டுமானம் மற்றும் உணவக வேலைகளில் ஈடுபட்டதாக CBSA தெரிவித்துள்ளது.

குடிவரவு அனுசரணைக்காக (immigration sponsorship) வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இருந்து 40,000 டாலர் வரை சிங் வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Immigration and Refugee Protection Act) கீழ் உள்ள ஒரு குற்றச்சாட்டை கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.