2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் (Writ) மனு மீதான மேலதிக விசாரணை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் (Court of Appeal) ஜூன் 24 ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாய்மூல சமர்ப்பணங்களை ஆரம்பித்தார்.