ழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் (Tractor) மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம்: கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி, கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.
பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தின் சாரதி, பொலிஸார் மீது இயந்திரத்தை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 50 வயதுடைய பொலிஸ் சார்ஜெண்ட் ஹெட்டியாராட்சி அல்பேட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.
5 நாட்களாகத் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேகநபர் (உழவு இயந்திரச் சாரதி), நேற்று (ஏப்ரல் 02, வியாழக்கிழமை) சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு (Identification Parade) உட்படுத்தவும் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட மேலும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.