ஒன்டாரியோ அரசின் முடிவால் ஆர்வலர்கள் கவலை!

போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்க புதிய சட்டம் உதவும் என மாகாண அரசு கூறுகிறது; ஆனால் இது சாமானியர்களின் நிதிச்சுமையை அதிகரிக்குமோ என சிலர் அஞ்சுகின்றனர். ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து கட்டணங்களை (Transit Fares) நிர்ணயிக்கும் அதிகாரத்தைத் தன்வசப்படுத்த மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகச் சிலர் வரவேற்றாலும், டொராண்டோ போக்குவரத்து ஆணையத்தின் (TTC) எதிர்காலம் குறித்துப் பலர் கவலை தெரிவித்துள்ளனர். வீடு கட்டுமானத்தை […]
கென்யாவில் மசூதி மீது அரிவாள் தாக்குதல்: கனடியர் மீது குற்றம்?

கென்யாவின் நைரோபியில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்து, அரிவாளால் தாக்கி சுமார் ஐந்து பேரை காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட கனடிய நபர் ஒருவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் குற்றப்புலனாய்வு இயக்குநரகம் (DCI) தெரிவித்துள்ளபடி, 32 வயதான அந்த நபர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது பயங்கரவாதம் மற்றும் உடல் ரீதியான கடுமையான காயம் விளைவித்தல் உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம், ஒரு நபர் தொழுகைக்கு […]
தமிழ் அகதி விவகாரம்: இலங்கையில் உள்ள அபாயங்களை ஒப்புக்கொண்டார் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடா வந்தடைந்த தமிழ் அகதி ஒருவரை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தான் தலையிடப் போவதில்லை என்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தகைய நபர்கள் இலங்கை திரும்பும்போது எதிர்கொள்ளும் ஆபத்துகளை அவர் ஒப்புக்கொண்டார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் CTV News கேட்ட கேள்விக்கு பதிலளித்த கரி ஆனந்தசங்கரி, தற்போது டொராண்டோவில் வசிக்கும் குமார் துரைசிங்கம் என்பவரது விதியைத் தீர்மானிக்க நீதிமன்றங்களே சிறந்த இடம் என்று கூறினார். 2010 ஆம் […]
எரிபொருளின் விலை அதிகரிக்குமா?

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அளவீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 109 டொலருக்கும் அதிக விலையில் விற்பனையாகின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் […]
சிஐடி பிரிவுக்குள் இஷாராவுக்குகு பிறந்த நாள் கொண்டாட்டம்; விசாரணைகள் ஆரம்பம்
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு கொழும்பு குற்றப்பிரிவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியமை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபரின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டும் திட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மார்ச் 29 கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) அங்கு சென்று, இது தொடர்பாக அறிக்கையைச் சமர்ப்பித்ததாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அறிக்கையின்படி, சந்தேகநபரின் பிறந்தநாளுக்காக […]
கடும் பொருளாதார அழுத்தம்; 2,010 கைதிகளை விடுதலை செய்கிறது கியூபா?

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் பொருளாதார அழுத்தத்தினால் அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு நடவடிக்கையாக, 2,010 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக கியூபா அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. கைதிகளின் நன்னடத்தை, உடல்நிலை மற்றும் அவர்கள் செய்த குற்றங்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘கிரான்மா’ (Granma) தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்படுபவர்கள் யார்? இந்த […]
வலிகாமம் தெற்குகில் திடீர் பரிசோதனை

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று (02) இரவு மற்றும் இன்று காலை விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச சபைத் தவிசாளரின் நேரடி அறிவுறுத்தலுக்கு இணங்க, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் போது, முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வந்த நான்கு நடமாடும் விற்பனை வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. […]
ஈரான் வெற்றியைப் பிரகடனப்படுத்தி போரை முடிக்க வேண்டும் – ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்

தனது நாடு “வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்” என்று , ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜாரீஃப், வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘ஃபாரீன் அஃபையர்ஸ்’ (Foreign Affairs) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் பல ஆண்டுகளாக ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஜாரீஃப். அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை […]
அமெரிக்க விமானியை ‘உயிருடன்’ பிடிப்பதே முன்னுரிமை – ஈரானிய ஆளுநர்

ஈரானின் தெற்குப் பகுதியான கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் (Kohgiluyeh and Boyer-Ahmad) மாகாணத்தின் ஆளுநர், வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானப் படை வீரர்களை “உயிருடன் பிடிப்பதே” தற்போதைய முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார். “எதிரிப் படைகளைக் கைப்பற்றுவதில் அல்லது அழிப்பதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆளுநர் அலுவலகத்தால் சிறப்புப் பாராட்டுக்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறியதாக அரை-அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அந்த அமெரிக்க “ஊடுருவல்காரரை” கண்டுபிடிப்பவர்களுக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் சார்பில் 10 பில்லியன் தோமன்கள் சன்மானமாக வழங்கப்படும் […]
பலத்த மின்னல் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (03) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் […]