நாவற்குடாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – 22 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், நாவற்குடா பகுதியில் கடந்த 01 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, கடந்த 01 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துள்ளன. இதன்போது, பின்னால் வந்த […]

பலத்த மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இருவர் வெட்டிக்கொலை – ஒருவர் படுகாயம்

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். இன்று காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]

விசேட சோதனை நடவடிக்கை: 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (02) முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது, 29,033 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 222 பேரும், திறந்த […]

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று (03) நண்பகல் வேளையிலேயே குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கைதிகளைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இம்முறை யால பருவத்தில் நீரை விநியோகிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை!

இம்முறை யால பருவச் செய்கைக்காக விவசாய நிலங்களுக்கு நீரை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்துத் தெரிவிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 76% ஆகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக நாடு முழுவதிலும் உள்ள 376 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 8,00,200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இம்முறை யால […]

சேதமடைந்த எந்தவொரு உட்கட்டமைப்பையும் நாம் மீண்டும் கட்டியெழுப்புவோம் – ஈரான்

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத்’ (Truth Social) சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பாலங்கள் போன்ற […]

சாதனை படைத்த மாணவி இசைப்பிரியாவை சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி

​அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த, மாணவி விஜயரூபன் இசைப்பிரியாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ​இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் இராசரத்தினம் அரவிந்தன், பூநகரிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ( நல்லூர் வட்டாரம்) குலவீரசிங்கம் குணலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்பு

ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், இலங்கையின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யா குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கவும் ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பின் முக்கிய […]

கனடிய நிதி மற்றும் தேசிய வருவாய் துறை அமைச்சரின் சீன விஜயம் நிறைவு

கனடிய நிதி மற்றும் தேசிய வருவாய் துறை அமைச்சரான பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne), சீன மக்கள் குடியரசிற்கான தனது ஆக்கபூர்வமான பயணத்தை இன்று நிறைவு செய்தார். கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடன் நடைமுறை ரீதியான உறவுகளை வளர்ப்பதன் மூலமும், வர்த்தக கூட்டாண்மைகளை பன்முகப்படுத்துவதன் மூலமும் வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட கனடியப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்தது. அமைச்சருடன் கனடா வங்கியின் ஆளுநர் டிஃப் மெக்லெம் […]