சென்னை:
கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத் தலைமைச் செயலாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த அழைப்பை ஏற்று, மே 18-ஆம் தேதி முதல்வர் விஜய் கேரளா செல்லவுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பெரும் இழுபறிக்குப் பின் முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 18-ஆம் தேதி நடைபெறும் அவரது பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே சென்னையில் முதல்வர் விஜய் பதவியேற்ற விழாவிற்கு ராகுல் காந்தி நேரில் வந்து வாழ்த்தியிருந்த நிலையில், தற்போது கேரளாவில் இருவரும் மீண்டும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கேரளாவில் முதலமைச்சர் விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளவே காங்கிரஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் இந்த முதன்முறை கேரளா அரசுப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#VijayInKerala #VDSatheesan #KeralaCM_SwearingIn #RahulGandhi #VijayAsCM #BreakingNews #May16 #TamilNaduGovernment #KeralaPolitics #CongressUDF #ThalapathyVijay #TVK_Government #FriendlyStates #SouthIndianPolitics #ChiefMinisterVijay #RevanthReddy #Siddaramaiah #VijayFansKerala #TamilNews #CM_Vijay_Official_“`