கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம் – இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர். தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தின் போது எமது நிலம் எமது உரிமை ,நிலப்பறிப்பு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் , இராணுவ நிலைகளினை அரச காணிகளினுள் உடனடியாக நகர்த்துங்கள், இராணுவமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும் , எமது வாழ்வாதாரம் எமக்கு வேண்டும், மூதாதையர் பூமி எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்களடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் வி.மணிவண்ணன், மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் (அரகல) ராஜ்குமார் ரஜீவ்காந், அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி நே.சங்கீதன், முன்னாள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர், கேப்பாபுலவு மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது. குறித்த காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர

m

நிலவைச் சுற்றி பிரம்மாண்ட சூரிய மின்தகடு வளையத்திலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்?

November 25, 2026

நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும்

ha

கல்லரிச்சலில் ஆட்டுப்பண்ணைக்குத் தீ: ஆடுகள் கருகிப் பலி

November 25, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் பண்ணை

sajith-2

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சம் கூடாது!

November 25, 2026

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சமற்றதும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ye

இலங்கைப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறத்தில்…

November 25, 2026

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இலங்கைப் பாராளுமன்றம் புதன்கிழ​மை

dough ford

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மிகுந்த நம்பிக்கை

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என ஒன்ராறியோ மாகாண

carney truump 50

அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தத்திற்கு முன்னதாக பிரதமர் மார்க் கார்னிக்கு முன்னாள் அமைச்சர் ஜேம்ஸ் மூர் எழுப்பியுள்ள அவசரக் கேள்விகள்

November 25, 2026

ஒட்டாவா, நவ. 25: அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய வர்த்தக மற்றும் வரி ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள

WK2QV3VPEVASVGVMHZKCSFRSJM

ஸ்கார்பரோவில் வாகனம் மோதியதில் பெண் பாதசாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய பெண்

Murder

நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன்!

November 25, 2026

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகக் படுகொலை செய்துவிட்டுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 26 வயதுடைய கணவன், வாகரைப் பொலிஸாரால்

gend

“நீதியை உறுதிப்படுத்துவோம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம்’: பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரச்சாரம்!

November 25, 2026

ல்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு பிரச்சாரத்தை முன்னிட்டு, தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளை

acci main

வெவ்வேறு விபத்துகளில் அறுவர் உயிரிழப்பு!

November 25, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மற்றும் 82