குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தி அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னின்று உழைக்கும் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவுக்கும் எங்களது முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். இந்த விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகள் ஏற்படுமாயின், அதனைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எமது நாட்டில் நம்பகத்தன்மை மிக்க நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்று உள்ளது. இந்த விசாரணை விடயத்தில் யாருக்கேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்தை நாடித் தங்களது நியாயங்களை முன்வைக்க முடியும். எங்களது கட்சியைப் பொறுத்தவரை நாங்களும் எங்களது தலைமையும் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கிறோம்.

இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரி யார், இதனுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை அறிய வேண்டிய தேவை எமக்கு உள்ளது. இதற்கு எவரேனும் மிகச்சிறிய அளவிலாவது உதவி செய்திருந்தால் கூட, அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம். இதுவே எங்களது கட்சியின் முக்கிய கொள்கையாகும்.

யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அந்தக் கைதில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றிப் பேசுவது எங்களது பொறுப்பல்ல. அப்படிக் கைது செய்யப்பட்ட நபருக்கு ஏதேனும் அநீதி நடந்திருந்தால், அவர் நீதிமன்றத்தை நாடி தகுந்த சான்றுகளுடன் அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் நாம் நிச்சயமாகப் பேசுவோம்.

ஆனால், தற்போதைய சூழலில் இந்த விசாரணைப் பணிகளுக்கு நாம் தகுந்த அவகாசம் வழங்க வேண்டும். நாம் இந்த விசாரணைகளுக்கு எதிராகவோ அல்லது கைதான ஒருவரைக் குறித்தோ பேச ஆரம்பித்தால், விசாரணைகளைச் சீர்குலைக்கப் பார்க்கிறோம் என்று எம்மீது பழி சுமத்துவார்கள். அது எங்களது நோக்கமல்ல, எமக்குத் தேவை உண்மையான இறுதித் தீர்வு மட்டுமே என்றார்.

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி