சென்னை/தேனி:
முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் வெளியானதை அடுத்து, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்துத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார், நடிகைகள் மமிதா பைஜூ, கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் தாம்பரம் – கிண்டி ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, தேனி மாவட்டம் சின்னமனூர் பாரத் திரையரங்கு முன்பு பேனர் வைப்பதில் தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி தரப்பினருக்கும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி மோதலாக வெடித்தது. இரு தரப்பு மோதலைச் சமாதானப்படுத்த முயன்ற எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவின் காரின் பின்பக்கக் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துச் சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Jananaayagan #CMVijay #ChromepetTraffic #TheniBannerClash #MLAJagannathMishra #TVKParty #MovieRelease #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #EntertainmentNews #PublicDisruption #LawAndOrder #TamilNaduNews #CurrentAffairs #PoliticalViolence #Governance #LocalNews