சென்னை
தமிழகத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களான கும்பகோணம் டிகிரி காபி, பாலமேடு பால்கோவா உள்ளிட்ட 5 முக்கிய உணவுப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு (GI Tag) பெறத் தமிழக அரசு முறைப்படி விண்ணப்பம் செய்துள்ளது.
முதலீடும் ஏற்றுமதி ஊக்குவிப்பும்:
தமிழகத்தில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை ‘டி.என்.எபெக்ஸ்’ (TN-APEX – தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத் தரும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.
புதிதாக விண்ணப்பிக்கப்பட்டுள்ள 5 பொருட்கள்:
அந்த வகையில், தற்போது 5 பாரம்பரிய உணவுப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கோரி இந்திய அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக டி.என்.எபெக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அந்தப் பொருட்கள்:
-
தஞ்சாவூர்: கும்பகோணம் டிகிரி காபி
-
மதுரை: பாலமேடு பால்கோவா
-
திண்டுக்கல்: கொடைக்கானல் பன்றிமலை காபி
-
கடலூர்: காராமணிக்குப்பம் கருவாடு
-
நீலகிரி: நீலகிரி நெய்
ஏற்றுமதி மற்றும் வாழ்வாதாரம் உயரும்:
ஏற்கனவே செட்டிநாடு கைமுறுக்கு, சீடை, ராமநாதபுரம் பனை கருப்பட்டி, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டரை கருவாடு ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் இந்தப் பொருட்களுக்கான சர்வதேசத் தேவை மற்றும் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும்; உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக உயரும்,” என்று தெரிவித்துள்ளனர்.
#GITag #KumbakonamDegreeCoffee #PalameduPalkova #NilgirisGhee #PanrimalaiCoffee #TamilNaduGovernment #TNAPEX #TamilNaduFood #TNAgriculture #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates