கொக்காவில் பகுதியில் கார் மற்றும் கணரக வாகன விபத்து ஒருவர் பலி கிளிநொச்சி – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(17.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியில் கார் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.