கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக விளங்கும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், மருந்தாளர் (Pharmacist) பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாள்தோறும் அதிகளவிலான நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு மருந்தாளர்களுக்கு போதிய இடங்கள் (வெற்றிடங்கள்) காணப்படுவதால், மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.
வைத்தியசாலைக்கு தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளர்கள், மருந்துகளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நோயாளர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், மருந்துகளை தடையின்றி விரைவாக வழங்கவும் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.