நோவா ஸ்கோடியா மாகாணத்தின் டார்ட்மத் நகரில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற கார்னிவல் (Carnival) திருவிழாவில், ‘கரடி விரட்டி ஸ்பிரே’ (Bear spray) எனப்படும் ஆபத்தான இரசாயனத் திரவத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆயுதக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
டார்ட்மத் நகரின் பிரதான வீதி, இலக்கம் 219 இல் நடைபெற்ற வசந்தகால கார்னிவல் திருவிழாவில் நபரொருவர் ஆபத்தான திரவத்துடன் நடமாடுவதாக சனிக்கிழமை மாலை 5:50 மணியளவில் ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸாருக்கு அவசர அழைப்பொன்று கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞரிடம் கரடி விரட்டி ஸ்பிரே இருந்ததை அடுத்து அவரைக் கைது செய்து காவலில் எடுத்துள்ளதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எய்டன் டெம்ப்சி (Aiden Dempsey) என்ற இளைஞர் பின்வரும் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்:
-
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தமை
-
குற்றச் செயலைச் செய்யும் நோக்குடன் முகத்தை மூடி மறைத்திருந்தமை (Disguise with intent)
-
நன்னடத்தை உத்தரவை (Probation order) மீறியமை