சென்னை:
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகையறா’ படத் தயாரிப்புக்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் பெறப்பட்ட ரூ. 4.5 கோடி கடன் விவகாரத்தில் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார். ஃபைனான்சியர் கோபிக்கு வழங்கப்பட்ட காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதை அடுத்து தொடரப்பட்ட இந்த வழக்கில், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாங்கிய தொகையைத் திருப்பிக் செலுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நடிகர் விமலின் வழக்கறிஞர் ஆர். வெங்கடேஷ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மேல்முறையீட்டு நடவடிக்கைக்காகத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#ActorVimal #ChequeBounce #ChennaiCourt #MannarVakaiyara #LegalCase #ImprisonmentSentence #AppealSuspension #TamilCinema #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #FinanceDispute #CourtVerdict #StateNews #EntertainmentNews #LegalAction #CurrentAffairs #PublicNews #ActorUpdates