கனடாவில் தமிழீழ தேசியக்கொடியை வாகனத்திலிருந்து அகற்றுமாறு மிரட்டல்!

கனடாவில் கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், விஜயரத்தினம் தனுஷன் என்பவரை (இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர்) அவரது வாகனத்திலிருந்து தமிழீழ தேசியக்கொடியை அகற்றுமாறும் தன்னைத் தாக்குவேன் என மிரட்டியுள்ளதாகவும் வீடியோக்களையும் குரல்பதிவுகளையும் எமது Behind me ஊடக நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக தனுஷன் பகிர்ந்துள்ளார்.

மே 20 ஆம் திகதியன்று கனடி சியோன் விற்பனை நிலையத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் அருகில் வந்து தனது வாகனத்தை மறித்து அதற்குள் ஏற முற்பட்டார் எனவும் அதை தான் தடுத்துவிட்டு என்ன விடயம் என அவரை விசாரித்தபோது கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது வாகனத்திலுள்ள தமிழீழ தேசியக்கொடியை அகற்றிவிடுமாறும் இல்லாவிட்டால் தன்னையும் தாக்கி தனது வாகனத்தையும் சேதப்படுத்துவேன் எனவும் அவர் மிரட்டியதாகவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.

இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர் விஜயரத்தினம் தனுஷன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே 18) பிரம்டன் சிங்குசி பூங்காவுக்குச் சென்று அங்கே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரனை இலங்கை இராணுவம் அழித்த காட்சிகளையும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது மக்களுக்குக் கிடைக்காத நீதி பற்றியும் கனடாவிலுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார் .

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலையும் தனது நிறுவனத்தின் ஊடாக அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மார்க்கம் எம்.சி பிளாஸா சென்று அங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அவரால் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் ஸ்கார்பரோவில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விஜயரத்தினம் தனுஷன் வழங்க முற்பட்டபோது அங்கு வந்த ஒருவர், தனது இலக்கியா நிறுவனம் குறித்தும் தன்னைத் தமிழ்த் தேசியவாதி இல்லை என்றும் இலங்கை இராணுவத்தோடு நிற்பவர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைக் கையாடல் செய்தவர் எனவும் தன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி Behind me ஊடக நிறுவனத்தோடு தான் செயற்படும் போது இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கு Behind me வேலை செய்வதாகவும் தன்னையும் அதே கட்டமைப்புக்குள் கொண்டு கருத்துக்கள் வெளி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேற்குறித்த மிரட்டல்களுக்கு அடிபணிந்து தேசியம் சார்ந்து பயணிக்கும் தனது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் தன்னால் செய்ய முடியாது என்பதையும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் தான் செயற்படுகின்றேன் என்பதை முற்றுமுழுதாக மறுப்பதோடு இரு சகோதரர்களை யுத்தத்தில் பறிகொடுத்தவன். போராட்டத்தின் தார்மீகம் குறித்த சிந்தனையோடு இன்று வரை வாழ்ந்து வருகின்றேன் எனவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்