னடாவின் கனாட்டா (Kanata) பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக ஓட்டாவா முதலுதவிப் பிரிவினர் (Paramedics) தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு, மார்ச் வீதி (March Road) மற்றும் மெக்ஸ்வெல் பிரிட்ஜ் (Maxwell Bridge) சந்திப்புப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்தச் சிறுவன் மின்கலத்தினால் இயங்கும் ஸ்கூட்டரில் (Battery-operated scooter) சென்று கொண்டிருந்தபோது, அங்கு திரும்ப முயன்ற வாகனம் ஒன்று அவன் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கிழக்கு ஒன்ராறியோ சிறுவர் வைத்தியசாலைக்கு (CHEO) கொண்டு செல்லப்பட்டான். அவனது காயங்கள் பலத்தவை என்றாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என ஓட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.