கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்தி, கத்தோலிக்க – பௌத்த நல்லுறவை அழிக்கவே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சிக்கிறார். கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதை பேராயர் கர்தினால்  ஆதரித்துள்ள நிலையில், மகாநாயக்க தேரர்கள் சித்திரவதைக்கு எதிராக கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க சபைக்கும், புத்தசாசனத்துக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும்.

கத்தோலிக்க சமூகத்துக்கும், சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சிறந்த நல்லிணக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது பௌத்தர்களையும், கத்தோலிக்கர்களையும் வேறுப்படுத்தி, சிங்களவர்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சி திட்டமிட்டவகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் கத்தோலிக்க சபையை ஆக்கிரமித்து  இனங்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அரச சார்பற்ற நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியே அருந்தந்தையர்களான சிறில் காமினி, ஜூட் பிரனாந்து, ரொஹான் சில்வா ஆகியோர் கத்தோலிக்க சபையில் செயற்படுகிறார்கள். இவர்கள் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளார் என்று குறிப்பிட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்தி, கத்தோலிக்க – பௌத்த நல்லுறவை அழிக்கவே இவர்கள்  சூழ்ச்சி செய்கிறார்கள்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், சானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நியமிக்ப்பட்டுள்ளார்கள். இலங்கையில்  முதன்முறையாகவே அரசியல் கட்சியின் மேடையில் பிரசாரம் செய்த இருவர் பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய உயர் பதவிக்கு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்கள்

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்