கடற்படை ஆக்கிரமித்துள்ள முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்க்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்தவாரம் மன்னாருக்கு நேரடியாக வருகைதந்து குறித்த காணிவிடுவிப்புத்தொடர்பில் ஆராயப்படுமென பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் 22.05.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நாடாளுமன்றுஉறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் குறித்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத்தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே பிரதி அமைச்சரால் மேற்கண்டவாறு பதில் வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 25.05.2026ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுமென மன்னார் மாவட்ட செயலாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வாய்முல விடைக்கான வினாவிற்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது பதிலளிக்கையில்,
முள்ளிக்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரையில் 752ஏக்கர் காணிகள் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்தோடு கடற்படையினர் பயன்படுத்திவந்த பகுதியிலிருந்த 27 குடும்பங்களின் வீடுகளுக்குப் பதிலாக, கடந்த 2012ஆம் ஆண்டு மணற்காடுக் கிராமத்தில் கடற்படையினரால் 27வீடுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் இதன்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 77ஏக்கர் காணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், குறித்த முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மொத்தம் 829ஏக்கர் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த முள்ளிக்குளம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளேன்.
எனவே பிரதிப்பாது காப்பு அமைச்சரினால் இங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தவறானவையெனச் சுட்டிக்காட்டுகின்றேன்.
முள்ளிக்குளம் கிராமமக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர்.அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு முள்ளிக்குளம் மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட அந்த மக்களுக்கு அப்போது 150வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்றன. இந்நிலையில் 2002ஆம் ஆண்டு அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதில் பல வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மலைக்காடு, காயாக்குழி உள்ளிட்ட அயற்கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்தகாலங்களில் தமது பூர்வீக கிரமத்தினை விடுவிப்புச்செய்து அங்கு தம்மை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்துள்ளனர்.
அதன்பின்னர் முள்ளிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையில் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கும், தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.
இந்நிலையில் அயற் கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் பெருத்த சிரமங்களுக்குமத்தியிலேயே பாடசாலைக்கும், தேவாலயத்திற்கும். நீண்டதூரம் சென்றுவருகின்றனர்.
கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய தரப்பினரால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள் முள்ளிக்குளம் கிராமம் என்பது அந்த மக்களின் பூர்வீகக் கிராமமாகும்.
எனவே முள்ளிக்குளம் கிராம மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உடனடியாக அந்தக்காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கு மேலாக, வயற்காணிகள், தோட்டச்செய்கைக் காணிகள், நீர்ப்பாசனக் குளங்கள், என்பவற்றையும் கடற்படையினரும், வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையை முற்றுமுழுதாக கடற்படேயினரே ஆக்கிரமித்துப் பயன்படுத்திவருகின்றனர்.
எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் கடற்றொழில் இறக்குதுறை என்வற்றை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இதன்போது பதிலளிக்கையில்,
கடந்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் இந்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் தாங்கள் வலியுறுத்தியிருந்தீர்கள்.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியால் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே இந்தவிடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்தவாரம் மன்னாருக்கு வருகைதரவுள்ளேன்.
அந்தவகையில் தேசிய பாதுகாப்பிற்கான மூலேபாய முக்கியத்துவம்வாய்ந்த, இடங்களை தக்கவைத்துக்கொண்டு ஏனைய இடங்களை விடுவிப்பது தொடர்பில் பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அந்தவகையில் அந்தப்பகுதிக்குரிய மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சிலாவத்துறைப் பிரதேச செயலகத்திற்கு அழைத்து காணிவிடுவிப்பு சார்ந்த விடயங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த காலப்பகுதிகளில் அந்தப்பகுதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தாம் விடுவிக்கக் கோரிய கடற்றொழிலாழர்களுக்குரிய அந்த இறங்குதுறையில் அவ்வாறான செயற்பாடுகள் இடமபெறுவதாக நாம் கூறவில்லை. எனவே அந்த இறங்குதுறையை விடுவிப்பது தொடர்பிலும் எம்மால் கூடுதல் கவனஞ்செலுத்தப்படும்.
அத்திய அவசியமான நிலப்பரப்பினை மாத்திரம் வைத்துக்கொள்வதுதான் எமது நிலைப்பாடாகவிருக்கின்றது.
அவசர நிலைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், முப்படையினரை அங்கு நிலைநிறுத்துவதற்கான தேவைப்பாடு இருக்கின்றது.
பொலிசாரால் முன்னெடுக்கமுடியாத சில நடவடிக்கைகளை, முப்படையினர்மூலம் முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கின்றது.
அதேபோல பேரிடர்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாகத் தொழிற்படுவதற்கு தேவையான இடமாக அந்த இடம் காணப்படுகின்றது.
எனினும் அடுத்த வாரம் நேரடியாக வருகைதந்து சிலாவத்துறை பிரதேச செயலாளர், உரிய அரச அலுவலர்கள், உரிய கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவோமென பாதுகாப்பு பிரதி அமைச்சரினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது
4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது