ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், இரண்டு ஆண்கள் மீது டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூன் 19 அன்று பிற்பகல் 2 மணியளவில், கிப் ஸ்திரீட்டில் (Gibb Street) உள்ள ‘ரியல் கனேடியன் சூப்பர்ஸ்டோர்’ (Real Canadian Superstore) வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு நபர் ஒருவர் போலி மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்தி மருந்துச்சீட்டு ஒன்றின் மூலம் மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் அங்கு வருவதற்குள் அந்த நபர் வெளியில் காத்திருந்த வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத்திற்குள், கிங் ஸ்திரீட் வெஸ்ட் (King Street West) மற்றும் ஸ்டீவன்சன் ரோட் சவுத் (Stevenson Road South) பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு மருந்தகத்திற்கு அருகில் தேடப்பட்டு வந்த அந்த வாகனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கிருந்த இரண்டு ஆண்கள் எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது, அங்கிருந்து போலி மருந்துச்சீட்டு ஆவணங்களும், 15,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள மருந்துப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மொன்றியலைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது ஊதா (Mohamed Oudha) மற்றும் 39 வயதுடைய முகமது போல்ஃப்ரெட் (Mohamed Boulfred) ஆகிய இருவர் மீதும் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
5,000 டாலருக்கு குறைவான பண மோசடி (Fraud under $5,000)
-
போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் (Uttering a forged document)
-
குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை கைவசம் வைத்திருத்தல் (Possession of property obtained by crime over $5,000)
இவற்றுடன் முகமது போல்ஃப்ரெட் (39) என்ற நபர், நன்னடத்தை விதியை மீறியமைக்கான (Breach of probation) கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1-888-579-1520 (ext. 1701) என்ற எண்ணினூடாக டர்ஹாம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.