பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, பிராண்டி கூனி, பெக்கி ஹாம்பர் ஆகியோர் ‘பாதுகாப்பற்ற நிலையில் இருந்த நபர்களுக்கு’ தீங்கிழைத்துள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார்.
பர்லிங்டன், ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியினரான பிராண்டி கூனி (இடது), பெக்கி ஹாம்பர் (வலமிருந்து இரண்டாவது) (2022 இல் எடுக்கப்பட்ட படம்), ஜே.எல். (இடமிருந்து இரண்டாவது) மற்றும் அவனது மூத்த சகோதரர் எல்.எல். ஆகியோரது கொலை மற்றும் இதர குற்றச்சாட்டுகளில் கடந்த மே மாதம் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். அடையாளம் காப்பதற்கான நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர்களின் முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன. (மில்டனில் உள்ள ஒன்டாரியோ உயர் நீதிமன்றம்)
சமீபத்திய தகவல்: பெக்கி ஹாம்பர் (47), பிராண்டி கூனி (45) ஆகியோருக்கு, 12 வயது சிறுவனைக் கொலை செய்ததற்கும், அவனது தம்பியை சித்திரவதை செய்ததற்கும் குற்றவாளிகளாகக் காணப்பட்டதை அடுத்து இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு குறித்த அறிக்கைகளை (victim impact statements) சிலர் கண்ணீருடன் வாசித்தனர். அவர்களில் உயிர் பிழைத்த சகோதரர், சிறுவர்களின் உயிரியல் தாய் (biological mom) மற்றும் அவர்களின் முன்னாள் வளர்ப்புத் தாய் (former foster mom) ஆகியோர் அடங்குவர். ஹாம்பரும் கூனியும் கூட தங்களது சொந்த அறிக்கைகளை வழங்கினர்.
கடந்த மே மாதம், உயர் நீதிமன்ற நீதிபதி கிளேட்டன் கான்லன் பர்லிங்டன் தம்பதியினரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். எல்.எல். மற்றும் ஜே.எல். ஆகியோரின் அடையாளங்கள் ஊடக வெளியீட்டுத் தடையின் (publication ban) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன.
2022 டிசம்பர் 21 அன்று எல்.எல். உயிரிழந்தபோது, அவன் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தான். சிறுவர்கள் எவ்வாறு வெட்சூட் (wetsuits – நீர்மூழ்கி உடைகள்) அணிய வைக்கப்பட்டார்கள் என்பது குறித்து ஜே.எல். சாட்சியமளித்தான்.
முதலாவது நிலை கொலைக் குற்றச்சாட்டுக்கான (first-degree murder conviction) தண்டனையானது, குறைந்தது 25 ஆண்டுகளுக்கு பிணையில் (parole) வெளிவர முடியாதவாறான தானியங்கி ஆயுள் தண்டனையைக் கொண்டதாகும்.
எச்சரிக்கை: நீதிமன்ற நடவடிக்கைகள் குழந்தை துஷ்பிரயோகம், மற்றும் சுயஹானி, தற்கொலை ஆகியன குறித்த விபரங்களைக் கொண்டுள்ளன.