ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் தவறான தகவல்கள்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் ‘உயர்நீதிமன்றம்’ என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,

“நீத்துறை திருத்தச் சட்டமூலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும், நீதிபதிகளின் பதவிக்காலத்தை 63 வயதாக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை 67 வயதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை 65 வயதாகவும் அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தத் திருத்தங்களுக்குத்தான் தற்போது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் ‘உயர்நீதிமன்றம்’ என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே, ஐ.நா. சபை அனுப்பிய அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரையும் பதவிநீக்கினார்கள். ஆகவே, நீதித்துறை சுதந்திரம் பற்றி இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

ராஜபக்சக்கள் உட்பட திருடர்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன; பலர் சிறையில் உள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் திருடர்களுக்காகவே குரல் கொடுக்கிறார்; அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அரசாங்கத்தை எவ்வழியிலாவது விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துப் பக்கமும் செல்கிறார்.

அரசாங்கத்தின் முறைமை மாற்றம் சரி, ஆனால் ரணில் விக்கிரமசிங்கவைக் கைதுசெய்தது தவறு என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். யார் இந்த ரணில்? இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு மறைமுகமாக அவர் பொறுப்புக்கூற வேண்டும்” என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்