வங்கி முகாமையாளர்கள் விவகாரம்: 89 கணக்குகளில் 10,151 பணப் பரிமாற்றங்கள்

கைது செய்யப்பட்டுள்ள நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள், 89 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 10,151 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 2026 ஜனவரி மாதம் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் […]

முன்னாள் உலக சனூக்கம்பியன் மீது சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு

முன்னாள் உலக சனூக்கம்பியன் கிரீம் டாட், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்காக இன்று நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். 49 வயதான இவர், 1993 முதல் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு சிறுவர்கள் மீது ஆபாசமாகவும் தகாத முறையிலும் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறுமி ஒருவர் தொடர்பான குற்றச்சாட்டில், அவர் தகுதியற்ற முறையில் தொட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் உலக பட்டத்தை வென்ற டாட், ஒரு சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். […]

ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படும்

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்யும் முயற்சிக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஓமான் அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடாகும். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அவ்விரு நாடுகளும் தனித்தனியாக ஈரானுடன் பேசி வருகின்றன. உலகின் பொருளாதாரத்துக்கு முக்கிய நாடியாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. அமெரிக்க – ஈரான் போர் தொடங்கியதிலிருந்து சுமார் ஆறு மாதமாக அந்த நீரிணை பெரும்பாலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், Fox […]

கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) காலை உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறும் பாசிக்குடா பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கரையொதுங்கியிருந்த சடலத்தைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார […]

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் […]

எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார். இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற எல் நினோ நிலைமை குறித்தான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அதிக வெப்பத்துடன்கூடிய வானிலை காரணமாக தோலில் ஏற்படும தடிப்புகள், தசைப்பிடிப்பு […]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாளை பாராளுமன்றத்திற்கு விஜயம்

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாளை (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலைச் சபைக்குத் தெரிவித்தார்.

டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.95% ஆனோர், அதாவது 49,163 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 19,778 (21.30%) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18,433 (19.85%) நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 […]

ஒப்பந்தம் எட்டப்படவுள்ள நிலையில் கனடா மீதான புதிய வரியை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்துகிறார் டிரம்ப்

இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து வரும் நிலையில், கனடியப் பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். “ஆவணங்களை இறுதி செய்வதற்கு உட்பட்டு, கனடாவும் அமெரிக்காவும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன என்ற உண்மையின் அடிப்படையில், நாளை காலை அமலுக்கு வரவிருந்த கனடாவுக்கு எதிரான 50% வரியை மூன்று நாள் காலத்திற்கு நான் இடைநிறுத்தியுள்ளேன்!” என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். சுமார் […]

“ஓராண்டுக்கு பிறகும் மறக்காமல் மலைக்கிராமத்திற்குச் சாலை!” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சி;

சென்னை சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைக்கிராமத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மறக்காமல் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவத்தை அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு திமுக எம்.எல்.ஏ பெரியசாமியும் உடனுக்குடன் பதிலடி கொடுத்ததால் அவையில் சுவாரஸ்யம் ஏற்பட்டது. மலைக்கிராமச் சாலைகள் – திமுகவின் பெருமிதம்: விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ பெரியசாமி, தங்கள் ஆட்சிக் காலத்தில் மலைக்கிராமங்களுக்கு அதிக அளவில் சாலைகள் அமைத்துக் […]