“நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்களின் பங்கை டி.கே.சிவக்குமார் மறந்துவிட்டார்!” – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்!

சென்னை கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், “தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிடக் கூடாது” எனப் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்கள்: “கடந்த 2000-ஆம் ஆண்டில் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சிறை வைத்திருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் […]
“தென்மாநில முதல்வர்கள் மாநாடு: தெலுங்கானா துணை முதல்வர் மல்லு விக்ரமர்கா சென்னை வருகை!”

சென்னை சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடைபெறவுள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு விக்ரமர்கா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷா தலைமையில் மாநாடு: தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நாளை (ஆகஸ்ட் 20) கோவளத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள […]
“குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் கபடி போட்டியில் பங்கேற்கத் தடை!” – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

மதுரை மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த சங்கக்கோட்டை கிராமத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கபடி போட்டிக்கு அனுமதி கோரிய வழக்கு: சங்கக்கோட்டை கிராம மந்தைக்களத்தில் கபடி போட்டி நடத்தக் காவல் துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, சோழவந்தானைச் சேர்ந்த முகேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு […]
“சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்!” – கர்நாடக அரசிற்கு வைகோ ஆவேசக் கோரிக்கை!

சென்னை கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குப் பிணையில் வர முடியாத அளவிற்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். அமித் ஷா வருகை குறித்து வைகோ: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது குறித்துக் […]
“ரூ.397 கோடி மின்சார வாரிய முறைகேடு!” – செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீடு உட்பட 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
சென்னை மின்சார வாரிய ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று (ஆகஸ்ட் 19) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.397 கோடி டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) கொள்முதல் செய்ததில் […]
“தமிழக அரசியலில் புதிய கூட்டணி!” – ஒன்றாகக் களம் இறங்கும் சீமான் – கிருஷ்ணசாமி – வேல்முருகன்: இடைத்தேர்தலில் போட்டி?
சென்னை தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணியாக வருகின்ற இடைத்தேர்தலில் ஒன்றாகக் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். தவெக வெற்றி ஏற்படுத்திய புதிய அரசியல் களம்: தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு கட்சிகள் முளைத்துத் தீவிரமாகச் செயல்பட்ட போதிலும், […]
வீழ்ச்சியடையும் அச்சகத்துறை

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 50% முதல் 60% வரையிலான எழுத்தாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளதாக இலங்கைப் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. மேலும், 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இத்துறையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டது. அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு முதன்முறையாக 2023 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள் காரணமாக புத்தகங்களின் விலைகள் உயர்ந்து, விற்பனை குறைந்ததே இதற்குப் […]
பலாலி காணி விடுவிப்பு போராட்டம் : போராட்டகாரருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல்

பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு பலாலி பொலிஸாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கில், 16.08.2026 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின் ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு […]
கடுமையான போட்டி நிலவும் வார்டாக மாறுகிறது யுனிவர்சிட்டி-ரோஸ்டேல்

டொராண்டோவின் 2026 நகராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் தருவாயில், யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் முன்னாள் கவுன்சிலர் மைக் லேட்டனும் (Mike Layton) ஒருவர். 2026 நகராட்சித் தேர்தலை முன்னிட்டு யுனிவர்சிட்டி-ரோஸ்டேலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் டொராண்டோ நகர முன்னாள் கவுன்சிலர் மைக் லேட்டனும் ஒருவர். யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் தொகுதியில் தற்போது 11 வேட்பாளர்கள் உள்ளனர்; இது டொராண்டோவின் எந்தவொரு வார்டையும் விட அதிகமான எண்ணிக்கையாகும். முன்னாள் கவுன்சிலர் மைக் லேட்டன், முன்னர் 2018 முதல் […]
கனடிய சிறு தொழில்களுக்கான மேலதிக கூட்டாட்சி கொள்முதல் வாய்ப்புகள் வால்டெஸ் அறிவிப்பு!

கனடாவின் பொருளாதாரத்திற்குச் சிறு தொழில்களே முதுகெலும்பாக விளங்குவதோடு, புதுமைகளை ஊக்குவிக்கவும், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களை வலுப்படுத்தவும் வழிவகுக்கின்றன. இதன்காரணமாகவே, கூட்டாட்சி அரசின் கொள்முதல் (federal procurement) வாய்ப்புகளைச் சிறு தொழில்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாங்க மறுசீரமைப்பு, பொதுப் பணிகள் மற்றும் கொள்முதல் அமைச்சரும் கியூபெக் பிரதிநிதியுமான கௌரவ ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound), மற்றும் தொழில்துறை அமைச்சரும் கியூபெக் […]