கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்’

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல்களின் சங்கமம் கடந்த 16ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. நடனங்கள், பாடல்கள், சிறார்களது உரைகள், எழுத்தாளர்கள் குரு அரவிந்தன், தீபச்செல்வன், கமலவதனா ஆகியோரது நூல் வெளியீடுகள் மற்றும் உரைகள் ‘எழுநா’ சஞ்சிகையின் உருவாக்கம் வளர்ச்சிப்போக்கு பேசுபொருட்கள் குறித்த பார்வைகள் ஆகியன இடம்பெற்றன. அத்துடன் கண்காட்சியில் கலந்துகொண்ட நூலாசிரியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் நாட்டைவிட்;டு வெளியேறிய அகதிகள் மீண்டும் இலங்கை வருகையில் எதிர்கொண்ட தடைகள் நீக்கம் – நாடாளுமன்றத்தில் அமைச்சர்

யுத்தகாலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமானநிலையங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு திரும்பவிரும்பினால் அவர்கள் இலங்கை தூதரகம் ஊடாக இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அங்கீகரிக்கப்படாத வகையில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப முயன்றவேளை கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டார்கள்.அவ்வேளை குடியகல்வு திணைக்களம் […]

இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவேண்டும்- இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்

இந்திய – இலங்கை உறவுகள் குறித்து தூதுவர் மஹிஷினி கொலோன்ன உரை இலங்கையின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மூலோபாய சுயாட்சி ஆகியவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்தியாவுடனான மூலோபாயப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்ன (Mahishini Colonne) வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (National Defence College – NDC) 66வது பயிற்சி வகுப்பில் செவ்வாய்க்கிழமை (19 ஆகஸ்ட் 2026) உரையாற்றியபோதே […]

பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்? – அமைச்சர் விளக்கம்!

பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் இயங்கி வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாமோ அல்லது பயங்கரவாதப் பயிற்சி நிலையமோ இல்லை என அவர் கூறினார். இதுவரை சேகரிக்கப்பட்ட […]

இங்கிலாந்து ஐந்து வெப்ப அலைகளால் உணவு விலை அதிகரிப்பு நெருக்கடியில்…

ங்கிலாந்து தனது உணவுத் தேவைகளுக்காக, அதிலும் குறிப்பாகக் காலநிலை நெருக்கதியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நம்பியிருப்பதால், அது உணவு விலை அதிர்ச்சிகளுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு பிரிட்டனின் பெரும்பகுதி சாதனை அளவிலான ஐந்து வெப்ப அலைகளால் வதங்கியதுடன், வறட்சி மற்றும் காட்டுத்தீயையும் எதிர்கொண்டது. இந்த வெப்பமான, வறண்ட சூழ்நிலைகள் பயிர்களைப் சேதப்படுத்தியுள்ளதுடன் உள்நாட்டு உற்பத்தி விளைச்சலையும் குறைத்துள்ளன. எப்படியிருப்பினும், மிகவும் பிரபலமான சில புதிய உணவுப் […]

குடிபோதையில் வாகனம் செலுத்திய விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னர் கவலை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர், தனது குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு குறித்து உலகளாவிய ஊடகங்கள் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தியுள்ளமை குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார். இது தனக்கு வெளிநாடுகளில் கிடைக்கவிருந்த மதிப்புமிக்க வர்த்தக வாய்ப்புகளைப் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறன்று (Easter Sunday) மதுபோதைச் சோதனைச் சாவடியை நெருங்கியபோது, வாகனத்தின் இருக்கையை அருகில் இருந்த பயணியுடன் மாற்ற முயன்ற 39 வயதான டேவிட் வார்னர், பரிசோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமையன்று […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சிறுபான்மையின எம்.பிக்களை சந்தித்தார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) அன்று, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரதேச மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற […]

செம்மணி உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை வேண்டியது அவசியம்!

செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும். அத்துடன், சர்வதேச நீதி விசாரணைக்குத் தற்போதைய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவ்வாறு சர்வதேச நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் […]

தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்கஇ நாய் வேடமணிந்து சென்ற நபர்

இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, கந்த்வா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தீபக் ரத்தோர் வந்திருந்தார். அவருடன், நாய் வேடம் அணிந்த ஒருவரும் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரத்தோர், “நகரில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் நாய் கருத்தடை திட்டத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தெருநாய் பிரச்சனை […]

தென்கிழக்கு லண்டனில் தீ விபத்து

தென்கிழக்கு லண்டனில் உள்ள ஒரு கழிவுப்பொருட்கள் ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது; இதனால் நகரின் வான்வெளியில் கரும்புகை மேகங்கள் கொழுந்துவிட்டு எழுந்துள்ளன. டெப்ட்ஃபோர்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர தீயை அணைக்கும் பணியில், 15 தீயணைப்பு வண்டிகளும் மற்றும் சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 டன் அளவிலான வீட்டுக் கழிவுகள் தீ விபத்தில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் நிலையில், […]