22க்கு எதிராக மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைத்தன: சபாநாயகர்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகளும், “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில், புதன்கிழமை (19) அன்று அறிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஓகஸ்ட் 18 ஆம் திகதி இந்த இரு சட்டமூலங்களும் முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் […]

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் நண்பன் கைது!

பண்டாரகம, மஸ்விலவில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 18.672 கிலோ ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது. “குடு சலிந்து” மற்றும் “துபாய் ரவி” என அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் முக்கிய கூட்டாளிதான் இந்த சந்தேக நபர் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

“3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி?” – சட்டப்பேரவையில் எ.வ.வேலு விளக்கம்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி பதிலடி!

சென்னை திமுக ஆட்சியில் கட்டப்பட்டு மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்த தென்பெண்ணை ஆற்றின் பாலம் குறித்த விவாதம் இன்று சட்டப்பேரவையில் அனல் பறக்க நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அளித்த விளக்கமும், தற்போதைய அமைச்சர்களின் குற்றச்சாட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரூ.16 கோடி பாலம்: 3 மாதங்களில் இடிந்தது எப்படி? கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் […]

“கண் முன்னே கையைவிட்டுப் போகும் நீர்வளம்!” – சட்டப்பேரவையில் சவுமியா அன்புமணி வேதனை!

சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கண் முன்னேயே கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது எனப் பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி மிகுந்த வேதனையுடன் பேசினார். கூவம் மற்றும் தாமிரபரணி சீரழிவு: இந்தியாவில் எங்கும் இல்லாத பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், கூவம் ஆறும் சென்னையின் மிகப்பெரிய அதிசயங்கள். ஆனால், கூவம் ஆறு சென்னைக்குள் வரும்போது ரசாயனக் கழிவுகள் கலந்து சாக்கடையாக மாறுகிறது. நல்ல தண்ணீரில் சாக்கடையைக் கலப்பது சட்டப்படி குற்றமாகும்; […]

“கிலோ கணக்கில் அல்ல… 3 டன் மல்லிகைப் பூக்கள் ஆற்றில் வீச்சு!” – விலை வீழ்ச்சியால் கிருஷ்ணகிரி விவசாயிகள் கண்ணீர்!

கிருஷ்ணகிரி விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்காத விரக்தியில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சுமார் 3 டன் மல்லிகைப் பூக்களைத் தென்பெண்ணை ஆற்றில் கொட்டி அழித்த சம்பவம் விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவம் தவறிய விளைச்சலும் கடும் விலை வீழ்ச்சியும்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி தீவிரமாகச் செய்யப்படுகிறது. இந்த விவசாயத்தை மட்டுமே முழுமையாக […]

“கொடுக்கிறதுதான் கொடுக்கிறீர்கள்… இன்னோவா காராகக் கொடுங்கள்!” – முதலமைச்சர் விஜய்யிடம் எம்.எல்.ஏ சண்முகன் கலகலப்பான கோரிக்கை!

சென்னை தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்த நிலையில், தவெக எம்.எல்.ஏ சண்முகன் தனக்கு இன்னோவா கார் வேண்டும் என நகைச்சுவையாகக் கோரிக்கை விடுத்தது அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு: இன்று நடைபெற்ற நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, முதலமைச்சர் விஜய் 110 […]

“கம்யூனிஸ்ட் கட்சியினர் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் உத்தரவா?” – அதிகார அத்துமீறல் என அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுள்ள விவகாரத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வட்டாட்சியர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறை – அதிகார அத்துமீறல்”: இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் […]

“தவெக எம்.எல்.ஏ.க்கள் எதற்காக கத்துகிறார்கள் என்றே தெரியவில்லை!” – சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு; ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வாகனம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு மற்றும் ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தச் சூழலில், முக்கியப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தனர். “தவெக […]

“யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய நெகிழ்ச்சி முதியவர்!”

நாமக்கல் யாசகம் பெற்றுச் சேமித்த பத்தாயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் ஒருவர் வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் நிதிக்குத் தொடர் நன்கொடை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான முதியவர் பூல்பாண்டியன். இவர் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தாமல் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தொடர்ந்து […]

“சென்னை – புதுச்சேரி கடல் வழிச் சாலை, மாமல்லபுரம் படகுப் போக்குவரத்து!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மெகா அறிவிப்புகள்!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாநிலத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் எண்ணற்ற பிரம்மாண்ட திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார். கடல்வழிப் போக்குவரத்து & உயர்மட்டச் சாலைகள்: மாமல்லபுரம் – புதுச்சேரி படகுச் சேவை: கடல்சார் சுற்றுலாவை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் சென்னை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே புதிய படகுப் போக்குவரத்துச் சேவை தொடங்கப்படும். மும்பை மாடல் கடல்வழிச் […]