பண்டாரகம, மஸ்விலவில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 18.672 கிலோ ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது.
“குடு சலிந்து” மற்றும் “துபாய் ரவி” என அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் முக்கிய கூட்டாளிதான் இந்த சந்தேக நபர் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.