செம்மணி உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை வேண்டியது அவசியம்!

செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும். அத்துடன், சர்வதேச நீதி விசாரணைக்குத் தற்போதைய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவ்வாறு சர்வதேச நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் பேசுகையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆம் நாள் அகழ்வு கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தமாக 572 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 565 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக, செம்மணியில் தோண்டத் தோண்டத் தமிழ் மக்களுடைய மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிறார்கள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. தடையப் பொருட்களாகச் சிறார்களின் பால் போத்தல்களும், பாடசாலைப் பைகளும் வெளிப்படுகின்றன.
பச்சிளம் பாலகர்களும், பாடசாலைச் சிறார்களும், தாய்மாரும் என்ன பாவம் செய்தார்கள்? ஆயுதங்களோடு இருந்தார்களா?

எனவே, இந்தப் படுகொலைக் குற்றவாளிகளும், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னாலுள்ள அப்போதைய ஆட்சியாளர்களும் சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 17ஆம் திகதி ‘நீதியின் ஓலம் – 02’ அணையாவிளக்கு தொடர் போராட்டத்தின் இறுதிநாளில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்குச் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியே குறித்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

எனவே, தயவுசெய்து தற்போதைய ஆட்சியாளர்களே, எமது மக்களின் வலிகளையும் அவலங்களையும் புரிந்துகொள்ளுங்கள். எமது தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்குச் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுங்கள்; சர்வதேச நீதி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென இப் பாராளுமன்றத்தைக் கோருகின்றேன்”என்றார்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க