ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக, எதிர்வரும் மே 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று அவரது காரல்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.