எமது காணிகள் கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் ஒயாது..! ‘ பலாலி- மயிலிட்டி மக்கள் உறுதி

யாழ். வலி, வடக்கு மக்களின் காணிகளை தேசிய பாதுகாப்பின் பெயரால் அபகரித்துள்ள அரசாங்கம் மற் றும் இராணுவம், மக்களின் காணிகளில் விவசாயம் செய்து, உற்பத்திப் பொருட் களை செய்து, சுற்றுலா விடுதிகளை நடாத்தி வருமானம் ஈட்
டிவரும் நிலை யில், சுயதேவைக்காக மட்டுமே விவசாயம் செய்வதாக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறுவது வேடிக்கை என மக்கள் கூறியுள்ளனர்.
வலி, வடக்கு காணிகள் விடுவிக்கப்படாது என அண்மையில் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடா ளுமன்றில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், மயிலிட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஊடக ங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறு கையில், வலி வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்த தரவுகளில் குழப்பம் உள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலகம் 2117 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படா மல் உள்ளதாக கூறும் அதேவேளை மாவட்டச் செய லகம் 2500 ஏக்கர் காணி விடுவிக்கப்படாமல் உள்ளதாக கூறியுள்ளது. ஆக தரவுகளில் பாரிய குழப்பம் உள்ளது. பிரதி அமைச்சர் அருண ஜயசேகர யாழ்ப்பாணம் வருகைதந்த போது வலி,வடக்கு மக் களை சந்திக்கவில்லை. பிரதேச சபை தவிசாளரையும் கூட சந்திக்கவில்லை.
எங்களை சந்திக்காமல், எங்களுடைய நியாயத்தை கேட்காமல் எப்படி இரா ணுவ தேவைக்காக எங்களுடைய காணிகளை சுவீகரிக்க முடியும்? பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறுகிறார் இராணுவம் சுயதேவைக்காக மட்டுமே விவசாயம் செய்கிறதாம். இந்தக் கருத்தை அவர் தெரிந்து செய்கிறாரா? தெரியாமல் செய்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள் காணி களில் இராணுவம் விவசாயம் செய்து அந்த மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த எங்களிடம் ஆதாரம் உண்டு. இராணுவ வாகனத்தில், இராணுவ சீருடை அணிந்தவர்களால் மருதனார்மடம் சந்தையில் இராணுவம் மரக்கறி விற்பனை செய்வதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. மரக்கறி விற்பனை செய்யப் பெறுகிறது.
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்கள் காணிகளில் நாங்கள் எப்படி விவசாயம் செய்து கொழும்புக்கு லொறி. லொறியாக மரக்கறிகளை அனுப்பி னோமோ அப்படியே இன்று இராணுவம் மரக்கறிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. இதனால், வலி, வடக்கு மக்கள் மட்டுமல்ல, யாழ்.மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை வலி, வடக்கு மக்கள் தங்கள் காணிகளை கேட்காமல்விட்டால், இரா ணுவம் மேலும். மேலும் மரக்கறியை உற்பத்தி செய்யும், உற்பத்திப் பொருட் களை உற்பத்தி செய்யும். அதனால், யாழ்.மாவட்ட த்திலுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படும். இந்த உண்மையை யாழ்.மாவட்டத்திலுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கொமாண்டோ பங்களா, எங்கள் போராட்டம் எங் கள் காணிகளுக்கானது மட்டுமானதல்ல, அதே போல் வலி,வடக்கு மக்கள் தங்கள் காணிகளை இராணுவத்திற்கு கொடுத்தால், என்றாவது ஒருநாள் அந்தக் காணி இந்த மாவட்டத் தின் குடிப்பரம்பலை மாற்றி யமைக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. ஆக, இதுவொரு எச்சரிக்கை. வலி,வடக்கு மக்களின் போராட்டத்திற்கு, மாவட்டத்திலுள்ள சகல மக்களும் பங்கேற்கவேண்டும். மறுபக்கம், மக்களுடைய காணிகளில் இராணுவம் சொகுசு பங்களாக்களையும், சுற்றுலா விடுதிகளையும் அழைத்து வருமானம்
பலாலியில் விமானப்படை பங்களா, காங்கேசன்துறையில் தல்செவன விடுதி போன்றன இலாப நோக்கில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, ரொட்டிக்கடை, சலூன் போன்றவற்றையும் இராணுவம் நடத்திவருகிறது. இந்த உண்மைகள் அர சாங்கத்திற்கு தெரியாதா? மயிலிட்டி கொமாண்டோ பங்களாவில் தங்கியிருந்த போது ஜனாதிபதிக்கு தெரியாதா இந்த பங்களா மக்களின் நிலத்தில் கட்டப்பட்டுள்ள செய்தி. ஆக, வலி,வடக்கு காணிகளை விடுவிக்கக்கூடாது என்பதில் அத்தனை அரசாங்கங் களும் உறுதியாக உள்ளன. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010ம் ஆண்டு மக்கள் நாங்கள் கண்ணால் பார்த்த மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், வரிசித்தி விநாயகர் ஆலயம், பலாலி செபஸ்த்தியான் ஆலயம் ஆகியன 2010க்கு பின்னர் இடித்து அழிக்கப்பட் டுள்ளன. அதற்கு காரணம் அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்கக்கூடாது என்பது மட்டும்தான். ஒவ்வொரு அரசாங்கமும் நாய்க்கு பிஸ்கட் கொடுப்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை விடுவி த்துள்ளனர். முழுமையாக மக்களின் நிலத்தை மக்க ளிடமே கையளிக்க யாரா
லும் முடியவில்லை. மயிலிட்டி துறைமுகம் பல கோடி செலவில் 3 தடவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால் 35 குடும்பங்கள் மட்டுமே பயனடைகின் றனர். மற்றபடி அது இந்திய இழுவைப்படகுகளின் சவக்குழி. எங்களுக்கு உங்கள் உதவித்திட்டங்கள் வேண்டாம். நாங்கள் உழைத்து பிழைத்துக் கொள்வோம் என்கின்றனர்.
Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்