“எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!” – எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிரடி!

சென்னை
எப்போது தேர்தல் வந்தாலும் மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு வர பயம் ஏன்?:
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் எங்கள் மாவட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி கட்சியை வெற்றி பெற வைத்தோம். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் அவரவர்கள் ஒற்றுமையாகப் பணியாற்றியிருந்தால், நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கட்சியின் தலைமை அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைக்கிறது. அனைவருக்கும் உரிய பொறுப்புகளை வழங்குகிறது. அனைத்து எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் அழைத்தார்கள். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்தார்கள்.
அனைவரையும் அழைக்கும் போது, அந்தக் கூட்டத்துக்கு வந்து தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைச் சொல்ல வேண்டாமா? ஏன் அவர்கள் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை? வந்து சொல்ல வேண்டும் அல்லவா? பொதுச்செயலாளரிடம் தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கட்சியில் உள்ள உறுப்பினர்களும், நிர்வாகிகளும் நேரடியாகத் தெரிவிக்க முடியும். ஆனால், ஏன் அந்தக் கூட்டத்துக்கு இவர்கள் வரவில்லை? என்ன பயம் அவர்களுக்கு? அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் ஆகியோர் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயந்துதான் அவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. பொதுச்செயலாளர் கூட்டிய கூட்டத்துக்கு வருவதற்கு உங்களுக்கு என்ன பயம்? செய்த தவறுகளை மறைப்பதற்காகப் பொதுச்செயலாளர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையா? அக்ரி மறுப்பு:
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை. இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான செய்தி. எடப்பாடி பழனிசாமியின் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றிக்குக் காரணம் பாமக என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் அயராத உழைப்பும், கூட்டணிக் கட்சிகளின் பலமும்தான் நமது வெற்றிக்குக் காரணம். பாமகவால்தான் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்று சொன்னால், விழுப்புரத்தில் 2016-இல் இவர் போட்டியிட்டபோது ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தார்? எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார்?” என்று சி.வி.சண்முகத்திற்கு நேரடி கேள்வி எழுப்பினார்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்:
“இனி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைக்கும்.
கடந்த 1996-இல் ஜெயலலிதா இருந்த போது கூட நாம் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். அப்போது திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமானது. எப்போது தேர்தல் வந்தாலும், மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் அமையும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அமைத்துத் தருவார்” என அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதியாகத் தெரிவித்தார்.
#AgriKrishnamoorthy #EPS #EdappadiPalaniswami #AIADMK #CVShanmugam #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates #AIADMKSplit
ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.