மாமல்லபுரம்:
தவெக-வில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்தார். \”அம்மாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் விசுவாசமாக இருந்தவர்கள் இப்போது உண்மையான தலைமையை நாடி தவெக-வில் இணைந்துள்ளனர்\” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தி.மு.க. ஆதரவுடன் இ.பி.எஸ். முதல்வர் ஆகத் துடித்த சதித் திட்டத்தை விஜய் முறியடித்துவிட்டதாக அவர் கூறினார். தான் இன்றும் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதை முதல்வர் விஜய் அனுமதித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்த செங்கோட்டையன், விஜய் நம்பி வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் என்று கூறினார். தவெக அரசு தடுமாறும் எனச் சிலர் நரித்தனமாகக் காத்திருப்பதாகவும், ஆனால் தவெக-வின் வலிமை அவர்களை நிலைகுலையச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார்.
#Sengottaiyan #EPS #ADMK #Vijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #PoliticalCriticism #Politics2026 #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash