மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதி நிதிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழா திருப்பலியின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 23 ஆம் திகதி மாலை 6 மணியவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கான வேஸ்பர் ஆராதனை நேற்று (01) மாலை இடம்பெற்றது.

mayiltha

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

July 2, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை

court-judge-hammer-gavel-696x398

6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல் – பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்தும் விடுவிப்பு

July 2, 2026

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத

736396541_996059546512540_5804732217163568534_n

புல்வெட்டும் இயந்திரத்தில் (Lawn Mower) சென்றவர் மோதி மரணம்: 16 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டது

July 2, 2026

நோர்த் டம்பிரிஸ் (North Dumfries) பகுதியில் புல்வெட்டும் இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் வாகன விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து,

Madu

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

July 2, 2026

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை

fuel_1

எரிபொருள் விலை உலக சந்தையில் கணிசமாகக் குறைந்தது

July 2, 2026

தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு

bou

பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த தேரர்கள் குழு மீது கெப் வண்டி மோதியதில் 8 பேர்கள் உயிரிழப்பு

July 2, 2026

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன்

AJZEGF53MBG4FC2OT4HSNKUWUU

கனடா தினத்தில் வாகன நிறுத்துமிடம் (Parking Spot) தொடர்பான தகராறில் ஒஷாவாவில் பெண் ஒருவருக்கு கத்திகுத்து

July 2, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ont.) மாநிலத்தில் உள்ள ஒஷாவா (Oshawa) நகரில், வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கத்திகுத்தில் முடிந்ததில்

Capture-1-750x375

2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை!

July 2, 2026

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள

palali

பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ உதயம்

July 2, 2026

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற

735625225_1028415239562110_4635928617052091190_n

வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!

July 2, 2026

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று

8

எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கார்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

July 2, 2026

மாமல்லபுரம்: தவெக-வில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக்

7

“திமுக அவமானப்படுத்தியது; நெஞ்சில் குத்திவிட்டது!” – வைகோ அதிரடி பேட்டி

July 2, 2026

நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தி.மு.க. உடனான கூட்டணி முறிவு மற்றும் தற்போதைய அரசியல்