மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (30) அன்று அப்பகுதிக்குச் சென்ற சில அயல் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளுடன் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும், அவர்கள் கத்திகளுடன் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்வதற்காக மயிலத்தமடு பண்ணையாளர்கள் சிலர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். எனினும், தங்களது […]
6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல் – பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்தும் விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (2) உத்தரவிட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி திருக்கோவில் பிரதேச […]
புல்வெட்டும் இயந்திரத்தில் (Lawn Mower) சென்றவர் மோதி மரணம்: 16 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டது

நோர்த் டம்பிரிஸ் (North Dumfries) பகுதியில் புல்வெட்டும் இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் வாகன விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் (Cambridge) நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று கிளைட் வீதியில் (Clyde Road) இந்த 16 வயது சிறுமி பிஎம்டபிள்யூ (BMW) காரை ஓட்டிச் சென்றபோது, அங்கிருந்த 51 வயது நபர் மீது கார் மோதியுள்ளது. இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே […]
மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். குறித்த […]
எரிபொருள் விலை உலக சந்தையில் கணிசமாகக் குறைந்தது

தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 70.80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் போர் ஆரம்பமான பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியளவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டொலர்களை நெருங்கிய மட்டத்தில் காணப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் […]
பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த தேரர்கள் குழு மீது கெப் வண்டி மோதியதில் 8 பேர்கள் உயிரிழப்பு

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na Si Nuan) பகுதியில் இன்று (02) நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே விரைந்து […]
கனடா தினத்தில் வாகன நிறுத்துமிடம் (Parking Spot) தொடர்பான தகராறில் ஒஷாவாவில் பெண் ஒருவருக்கு கத்திகுத்து

கனடாவின் ஒன்ராறியோ (Ont.) மாநிலத்தில் உள்ள ஒஷாவா (Oshawa) நகரில், வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கத்திகுத்தில் முடிந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டர்ஹாம் (Durham) பிராந்திய பொலிஸாரின் தகவல்படி, லேக்வியூ பார்க் அவென்யூ (Lakeview Park Avenue) மற்றும் சிம்கோ ஸ்ட்ரீட் சவுத் (Simcoe Street South) பகுதிக்கு அருகில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக 53 வயதுடைய பெண் ஒருவருக்கும், மற்றொரு […]
2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் , தமக்கான நியமனங்களை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக […]
பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ உதயம்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் போன்ற பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. […]
வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.