2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் , தமக்கான நியமனங்களை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறோம்.

கடந்த அரசாங்கங்கள் எங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதாகக் கூறின, ஆனால் இதுவரை எங்களுக்கு நிரந்தர நியமனமும் , எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள சிங்களப் பாடசாலைகளில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து நியமனம் பெற்று எமது பகுதிக்கு வரும் ஆசிரியர்கள் எமது பிரதேசத்தில் நிலவும் கடினமான சூழ்நிலைகள் கஷ்டங்கள் காரணமாக அவர்கள் நீண்ட காலம் எங்கள் பாடசாலைகளில் கடமையாற்றுவது இல்லை. இடமாற்றம் பெற்று தங்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லவே முயன்றனர்.

இதன் காரணமாக எங்கள் பகுதி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, எமது மாணர்வகளுக்காக எமது பிரதேசத்தில் உள்ள கல்வி கற்ற நாங்கள் ஒன்றிணைந்து. 2018ஆம் ஆண்டில் இருந்து உதவி ஆசிரியர்களாக எமது மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம்.

எமது பிள்ளைகள் கல்வி கற்க படும் இந்த அவதியை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்குப் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.

தகுதியான ஆசிரியர்கள் வந்தாலும் அவர்கள் அங்கு நிலைத்து நிற்கவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

இவ்வாறான நிலையில் தான் எமது மாணவர்களுக்காக நாம் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். எமக்கான சம்பள பிரச்சனை முதல் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்.

எங்களுக்கும் ஒரு நிரந்தர நியமனம் வேண்டும், ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

எங்கள் அனைவருக்கும் நியாயம் வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், நாங்கள் கல்வி கற்பிக்க தகுதியற்றவர்கள் அல்ல, நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் தகுதியின் காரணமாகவே அன்றைய அதிகாரிகள் எங்களைச் சேவையில் இணைத்துக்கொண்டனர்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, எங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் (Cabinet Approval) கிடைத்தது. மாகாண மட்டத்திலும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு மேல் எங்களுக்கு எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அமைச்சரவை ஒப்புதல் கடிதம் இருந்தும் அதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இல்லை.

நாங்கள் படும் இந்தத் துயரங்களையும், மாணவர் படும் கஷ்டங்களையும் கருத்தில்கொண்டு, எங்களது பிரச்சினைகளை ஆராய்ந்து, எங்கள் அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

mayiltha

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

July 2, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை

court-judge-hammer-gavel-696x398

6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல் – பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்தும் விடுவிப்பு

July 2, 2026

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத

736396541_996059546512540_5804732217163568534_n

புல்வெட்டும் இயந்திரத்தில் (Lawn Mower) சென்றவர் மோதி மரணம்: 16 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டது

July 2, 2026

நோர்த் டம்பிரிஸ் (North Dumfries) பகுதியில் புல்வெட்டும் இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் வாகன விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து,

Madu

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

July 2, 2026

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை

fuel_1

எரிபொருள் விலை உலக சந்தையில் கணிசமாகக் குறைந்தது

July 2, 2026

தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு

bou

பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த தேரர்கள் குழு மீது கெப் வண்டி மோதியதில் 8 பேர்கள் உயிரிழப்பு

July 2, 2026

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன்

AJZEGF53MBG4FC2OT4HSNKUWUU

கனடா தினத்தில் வாகன நிறுத்துமிடம் (Parking Spot) தொடர்பான தகராறில் ஒஷாவாவில் பெண் ஒருவருக்கு கத்திகுத்து

July 2, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ont.) மாநிலத்தில் உள்ள ஒஷாவா (Oshawa) நகரில், வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கத்திகுத்தில் முடிந்ததில்

Capture-1-750x375

2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை!

July 2, 2026

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள

palali

பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ உதயம்

July 2, 2026

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற

735625225_1028415239562110_4635928617052091190_n

வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!

July 2, 2026

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று

8

எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கார்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

July 2, 2026

மாமல்லபுரம்: தவெக-வில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக்

7

“திமுக அவமானப்படுத்தியது; நெஞ்சில் குத்திவிட்டது!” – வைகோ அதிரடி பேட்டி

July 2, 2026

நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தி.மு.க. உடனான கூட்டணி முறிவு மற்றும் தற்போதைய அரசியல்