அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்த தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்மானத்தை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பார் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை கேள்விக்குட்படுத்தும் மனுக்கள் குறித்த விசாரணைகளை இந்த மாத ஆரம்பத்தில் பூர்த்தி செய்திருந்த நீதிமன்றம் தனது நிலைப்பாட்டினை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார ஓகஸ்ட் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இதனை தொடர்ந்து இதனை சவாலுக்குட்படுத்தும் விதத்தில் 65 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.